நாம் தேவையில்லை என்று குப்பையில் தூக்கி போடும் வாழைப்பழத் தோலை வைத்தே, நம் வீட்டு செடிகளுக்கு உரத்தைத் தயாரித்து விடலாம். நம் வீட்டில் இருக்கும் சின்ன செடியாக இருந்தாலும், அதில் பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்றுதான் நினைப்போம். உயிருக்கு உயிராக ஒரு தொட்டியில் செடியை வாங்கி வைத்து, பராமரித்து வருவோம். ஏதோ ஒரு காரணமாக அந்த செடியானது சரியாக வரவில்லை என்றால், அதன் மூலம் அந்த செடியை வாங்கி வைத்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதை அனுபவித்தால் தான் உணர முடியும்.
இப்படி இருக்க சுலபமான இந்த உரத்தை நீங்கள் தவற விடாதீர்கள். இந்த வாழைப்பழத்தோல் உரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டு, உங்களுடைய உயிருக்கு உயிரான செடிக்கு ஊட்டச்சத்துள்ள உரத்தை நீங்களே தாருங்கள்! இந்த உரத்தை தொட்டியில் இருக்கும் செடிக்கு மட்டும்தான் ஊற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தோட்டங்களில் மண்ணில் வைத்து வளர்க்கும் செடிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான்கு அல்லது ஐந்து வாழைப்பழத்தின் தோல்களை எடுத்துக்கொண்டு, அதை கத்தரிக்கோலால், துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஒரு தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பாவில் 1கப் (நம் குளிக்கின்ற ஜக்கிள் ஒரு ஜக் தண்ணீர்) தண்ணீர் ஊற்றி இந்த தோலையும் அதில் சேர்த்து மூடிவிடுங்கள். மூடிய நிலையில் தான் இருக்க வேண்டும். அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை திறந்து முதலில் ஒரு குச்சியால் அதை நன்றாக கலக்கிவிட்டு அதன்பின்பு, ஒரு வடிக்கட்டியின் மூலம் அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணெண்ணெய் வடிகட்டும் புனலாக இருந்தால் இன்னும் சௌகரியமாக இருக்கும்.
வடிகட்டிய நீரை உங்கள் வீட்டு செடிகளுக்கு 1/2 கப் அளவிற்கு ஊற்றினாலே போதும். நன்றாக வளர வேண்டும் என்று அதிகமாக ஊற்றி விட வேண்டாம். 1/2 கப்(தண்ணீர் குடிக்கும் டம்ளரில் 1/2 டம்ளர் அளவு) போதுமானது. வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே போதும்.
உங்கள் வீட்டில் செம்பருத்தி செடி சிறியதாக இருந்தாலும் கூட, அந்த சின்ன செடியிலேயே நிறைய பூக்கள் பூப்பதை உங்களால் நிச்சயம் காண முடியும். குறிப்பிட்ட இந்த செடிக்கு தான் ஊற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் எந்தச் செடிக்கு வேண்டும் என்றாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் நல்ல பலன் கிடைக்கும்.
இதன் மூலம் உங்கள் செடிக்கு பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மூன்று சத்துக்களும் தேவையான அளவு கிடைத்துவிடும். வளரும் செடிகள் ஆரோக்கியமாக வளரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டுச் செடி நன்றாக வளர வேண்டும் என்று நினைத்தால் சிரமம் பார்க்காமல் இதை ஒரே ஒரு முறை ஒரு செடிக்கு மட்டும் உபயோகித்து தான் பாருங்களேன்! பலன் கிடைத்தால் அது நல்லதுதானே...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment