Tuesday, 19 May 2020

சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.  தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும்போது தோன்றிய ஆலாலம் எனும் விஷத்தால் தேவாசுரர்கள் அங்குமிங்கும் ஓடியதை நினைவுறுத்தும் வண்ணம்  இந்த பிரதட்சிணம் நடைபெறுகிறது.முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசித்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.என்ன புரியவில்லையா? இந்த நடைமுறையை தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மக்களின் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. உங்களுக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவரோடு ஒரு முறை சிவாலயம் சென்றுவருக...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment