Saturday, 23 May 2020

வீட்டில் வில்வ மரத்தை வைத்து வளர்க்கக்கூடாதா? அது ஏன்?

நம்முடைய வீடுகளில் பல வகையான மரம் செடி கொடிகளை வைத்து வளர்த்து வந்தாலும், சில மரங்களை வீட்டில் வைத்து வளர்க்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் இருக்கிறது. அந்த வரிசையில் வில்வமரத்தை வீட்டில் வைத்து வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? என்ற கேள்வி பல பேர் மனதிலும் உண்டு. இந்தக் கேள்விக்கான விடையையும், வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது என்று எதற்காக சொல்கிறார்கள் என்ற காரணத்தையும், இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வில்வ இலையானது சிவபெருமானுக்கு உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். எல்லா சிவன் கோவில்களிலும் கட்டாயம் வில்வமரம் இருக்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சிவபெருமானை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், வில்வ இலையால் அபிஷேகம் செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

வில்வ மரத்திற்கு இயற்கையாகவே மிகவும் குளிர்ச்சியான தன்மை உண்டு. இந்த மரத்தின் வேர், இலை, காய் அனைத்தும் குளிர்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவதால் இந்த மரத்தில், விஷ ஜந்துக்கள் வந்து தங்கி விடும் என்ற நம்பிக்கையும் நம் முன்னோர்களிடத்தில் இருந்தது. இந்த ஒரு காரணத்தால்தான் இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்க கூடாது என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

இதோடு மட்டுமல்லாமல் இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், வீட்டில் இருப்பவர்களும், வீட்டிற்குள் வருபவர்களும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமானது. தீட்டு படக்கூடாது. அதாவது தீட்டோடு இந்த மரத்தை தொடக்கூடாது. இதனால்தான், இந்த மரத்தை சில பேர் வீட்டில் வைத்து வளர்க்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் தங்களுடைய மனதையும், உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டில் தாராளமாக இந்த மரத்தை வளர்க்கலாம் என்றும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

வில்வ மரத்தில், ‘வில்வம், மஹா வில்வம்’ என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் எந்த வகை மரத்தில் எதை வேண்டுமென்றாலும் நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்கலாம். வளர்க்கக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், வளர்க்கலாம் என்று சொல்லுவதற்கும் பல வகையான காரணங்கள் ஆன்மீக ரீதியாகவும் உள்ளது. அறிவியல் ரீதியாகவும் உள்ளது. பொதுவாகவே இந்த வில்வ மரத்திற்கு மருத்துவ குணம் ஏராளம். குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் குடல் புழு, சைனஸ் பிரச்சனை இவைகளை குணப்படுத்தும் நல்ல மருந்தாக இருக்கின்றது. இது மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டை தவிர்த்து, நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைக்கும் தன்மையும் இந்த மரத்திற்கு உண்டு.

அந்த காலங்களில் எல்லாம் தியானத்திற்கு முன்பு இந்த வில்வ லேகியத்திதை சாப்பிட்டால், அதிகப்படியான சக்தியை பெறமுடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இது ஆன்மீகத்தின் முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதே அளவிற்கு மருத்துவ குணமும் ஏராளமாக அடங்கிய ஒரு மரமாகும்.

சிலபேருக்கு வில்வமரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதில் மனத் திருப்தி இல்லை என்றால், பரவாயில்லை. உங்களுடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம். உங்களுக்கு சொந்தமாக வேறு தோட்டங்கள் ஏதாவது இருந்தால், அந்த இடத்தில் இந்த மரத்தை வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் மனதிற்கு இஷ்டமில்லை என்றால், உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவில் வில்வ மரத்தை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி, பராமரித்து வாருங்கள். இது மிக மிக நல்லது. பெரிய புண்ணியத்தை தேடித்தரும்.

நீங்கள் செய்யும் இந்த ஒரு சின்ன செயல்பாடு உங்களுக்கும், உங்கள் பரம்பரைக்கும் பெரிய புண்ணியத்தை தேடித்தரும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். இதோடு மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாக, வில்வ மரத்தை பராமரித்து வளர்த்து வரும் குடும்பத்திற்கு லட்சுமி கலாட்சியமும் என்றும் நிறைந்திருக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment