பொதுவாகவே பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர்களது பொறுப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை விட, திருமணத்திற்குப் பின்பு, மனைவி ஸ்தானத்திற்கு செல்லும்போதும், அடுத்து அம்மா ஸ்தானத்திற்கு செல்லும் போதும், அவர்களுக்கு பொறுப்பு கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தின் முன்னேற்றமே, அந்த வீட்டு தலைவியின் கையில்தான் உள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இப்படி இருக்க ஒரு வீட்டில், அந்த குடும்பத் தலைவி சில வேலைகளை செய்வதில் சோம்பேறித்தனம் படாமல், தாமதிக்காமல் செய்து முடித்து விட்டால், நிச்சயம் அவள் தன்னுடைய வாழ்க்கையையும் ஜெயித்து விடுவாள். அவள் இருக்கும் அந்த வீடும் நிச்சயம் சுபிட்சமாக, சந்தோஷமாக, ஒரு கோவிலாகத்தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு பெண் தாமதிக்காமல் செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஆண்கள் காலை எப்போது எழுந்திருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. அந்த வீட்டுப் பெண் காலை எந்த சமயம் கண் விழிக்கிறாள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதாவது சில பெண்கள் காலை 5.30 அல்லது 6.00 மணிக்குள் விழிப்பு வந்துவிடும். ஆனால் எந்திரிக்க சோம்பேறித்தனம் இருக்கும். குறிப்பாக பள்ளிக்கு விடுமுறை என்றால், இன்று ஒரு நாள் மட்டும் கொஞ்ச நேரம் கழித்து எந்திரித்து வேலைகளை முடித்துக் கொள்ளலாம், என்ற எண்ணம் பெண்களுக்கு வரக்கூடாது. சூரியன் உதயத்திற்கு முன்பாகவே கண்டிப்பாக பெண்கள் எழுந்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் எழுந்திருக்க தாமதமாகி விட்டால், அன்று செய்யக்கூடிய வேலைகள் அனைத்துமே தாமதமாகி விடும். இதனால் தேவையில்லாத கோபமும், தேவையில்லாத அலைச்சலும் நம்முடைய வேலையை சீர்குலைக்கும் என்பதற்காகத்தான் இதை நம் முன்னோர்கள் பெண்களுக்காக சொல்லி வைத்துள்ளார்கள். இந்த தாமதத்தினால் அன்றைய நாள் முழுவதுமே வீணாவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக சமையல். சமையலறையில் சமைப்பதை என்றுமே தாமதப்படுத்தக் கூடாது. நம் வீட்டில் இருப்பவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பது ஒரு பக்கம் இருக்க, வீட்டிற்கு வரும் உறவினர்களை உபசரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது எந்த நேரத்தில் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களை உடனடியாக விருந்தோம்பலுக்கு அழைப்பது நம்முடைய பாரம்பரியம். சாப்பிடுகிறீர்களா? என்ற வார்த்தை கூட பெண்களின் வாயிலிருந்து வரக்கூடாது. சாப்பிடலாம் வாருங்கள்! என்று தான் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உபசாரம் எப்போது நடக்கும்? வீட்டில் சமையலறையில் சமையல், காலை வேளையிலேயே முடிந்திருந்தால் மட்டும் தான் இதற்கு சாத்தியம். முடிந்தவரை உணவு சமைப்பதை தள்ளிப்போடாதீர்கள்.
மூன்றாவது விஷயம் இறைவனுக்கு பூஜை செய்து நைவேத்யம் படைப்பது. வீட்டில் உள்ளவர்களையும் வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களையும் எப்படி பட்டினி போடக்கூடாது என்பது நம்முடைய சாஸ்திரமோ, நம்முடைய பாரம்பரியமோ அதேபோல் வீட்டில் இருக்கும் இறைவனையும், வீட்டிலிருக்கும் பெண் பட்டினி போடக்கூடாது.
நம் வீட்டு பூஜையறையில், காலை வேளையில் குளித்து முடித்துவிட்டு ஒரே ஒரு தீபம் ஏற்றிவைத்து, இரண்டு கற்கண்டுகள் மட்டுமாவது வைத்து, இரண்டு கைகளைக் கூப்பி சாமி கும்பிட்டாலே போதும். மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களையும் எந்த வீட்டில் ஒரு பெண் தன்னுடைய கடமையாக நினைத்து, தவறாமல் செய்து வருகிறாலோ, அவள் நிச்சயம் வாழ்க்கையிலும் வெற்றி அடைவள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த குடும்பமும் சுபிட்சம் அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ‘தாமதம்’ என்ற வார்த்தை பெண்ணின் அகராதியிலேயே வரக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கடமைகளை தன்னுடைய கண்ணாக நினைத்து செய்பவர்கள், அலுவலகப் பணிக்காக வெளியே செல்பவர்களாக இருந்தாலும்கூட, தங்களுடைய அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வீட்டு வேலை செய்வதற்கே கஷ்டப்படும் ஒரு பெண், அலுவலகப் பணியை மட்டும் சரியாக செய்து முடித்து விடுவார்களா! என்பது கேள்விக்குறியான விஷயம் தான். இப்படியாக ஒரு பெண் வீட்டில் செய்யவேண்டிய குறிப்பிடத்தக்க இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடித்தால் அவள் பக்கத்தில் கூட தோல்வி செல்லாது என்பதுதான் உண்மை.
இறுதியாக, ஒரு வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு பொறுமை மிக மிக அவசியம். “ஒரு ஆண் பொறுமை இழந்தால், அதில் அவன் மட்டும்தான் பாதிக்கப்படுவான். அவன் சந்தோஷம் மட்டும் தான் குறையும். அதே ஒரு பெண் பெருமை இருந்தால், அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியே போய்விடும்.” என்ற பொன்மொழியை இறுதியாக சொல்லி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment