Sunday, 19 April 2020

குமரனை தொழுதால் கொடூரநோய் நெருங்காது.!!

இல்லத்தில் இருந்து கொண்டு குமரனை இதயத்தில் நினைத்து கீழ் வரும் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடலை பாடி தொழுேவார்க்கு கொடூர நோய்கள் எதுவும் அண்டாது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போதைய கொரோனா குறித்து அருணகிரிநாதர் கூறியுள்ளார். இருமலுடன், நாசித்தும்மல் நுரையீரல் தொற்று உண்டாகி மூச்சுத்திணறல் வந்து உடலை பாழ்படுத்தும் என்று கூறியதன் மூலம் கொரோனா போன்ற ஒரு நோயை அப்போதே அருணகிரியார் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல அதைவிடவும் கொடிய நோய்கள் எந்தப்பிறவியிலும் என்னை நெருங்காமல் காத்தருள்வாய் பெருமானே என்று கந்தனை வேண்டி பாடுகிறார்.

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி - விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை- யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு- முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் - அருள்வாயே    
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக - இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை - விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் - மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு -பெருமாளே.

விளக்கம்: இருமல் என்ற நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய் ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடி களைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கடலால் சூழப்பட்ட இந்தப்புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே என்று முருகப்பெருமானை நோக்கி பாடுகிறார் அருணகிரிநாதர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment