Thursday, 23 April 2020

இன்று 24.4.2020 சித்திரை இரண்டாவது வெள்ளி! லட்சுமிதேவியை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால், பொருளாதாரப் பிரச்சினை தீரும்.!!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே லட்சுமி தேவிக்கு மிகவும் உகந்த நாள். இந்த தினத்தில் மகாலட்சுமியை நினைத்து நாம் வேண்டிக்கொண்டு வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக இந்த சித்திரை மாதம் வந்திருக்கும் இரண்டாவது வெள்ளியன்று அஷ்ட லட்சுமிகளில், தனலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு நம் வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சினையானது விரைவில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தனலட்சுமியை நினைத்து எந்த மந்திரத்தை உச்சரித்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய தினம் உங்களது காலை வேளையில் வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்து இருந்தாலும் பரவாயில்லை. மாலை 6 மணிக்கு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து, தனலக்ஷ்மியை மனதார வேண்டிக் கொண்டு, கண்களை மூடி வடக்குப் பக்கம் பார்த்தவாறு அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள். உங்களுக்கான மந்திரம் இதோ..

ஓம் தனதா தேவியே போற்றி

இன்றைய சூழ்நிலையில் ஊரடங்கு காரணத்தினால், நம்முடைய அனைவரது வீட்டிலும் பொருளாதார பிரச்சனை நிலவி வருகிறது. கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று தனலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய கைக்கு கோடி ரூபாய் கிடைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்வதற்கு, அடிப்படைத் தேவைகளுக்கு எந்த ஒரு பற்றாக்குறையும் வந்து விடக்கூடாது இந்த வேண்டுதலை அந்த இறைவனிடம் வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment