Wednesday, 22 April 2020

இன்று 23.4.2020 சித்திரை வியாழன்.! உங்களது தலையெழுத்து மாற, பிரம்மதேவனை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.!!

பொதுவாகவே ஒருவருடைய தலையெழுத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது பிரம்மதேவன் தான். ஏனென்றால் நம்மை படைக்கும் போதே, நம் தலையில், நாம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற எழுத்தினை எழுதுவது பிரம்மன் கையில்தான் உள்ளது என்பது ஐதீகம். ஒருவருடைய ஜாதகம் சரியில்லை என்றாலும் அவருடைய தலையெழுத்தை மாற்ற அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ‘திருப்பட்டூர் பிரம்மன் கோவில்’ பிரம்மாவின் பாதத்தில் வைத்து, அந்த ஜாதகக்காரரின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து வந்தால், அந்த நபருடைய தலையெழுத்து சரியாகும் என்ற  ஐதீகமும் உள்ளது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட பிரம்ம தேவனின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், நம் ஜாதகத்தில் ஏதாவது தீர்க்கமுடியாத தோஷங்கள் இருந்தாலும் கூட, அதன் தாக்கம் குறைய, சித்திரை மாதம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று பிரம்மாவை வழிபடுவது சிறப்பு. நாளை சித்திரை மாத வியாழன்.

இன்று மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரும் சித்திரை மாத வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்து பிரம்மதேவனை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இன்று, அதாவது சித்திரை மாதம் வியாழன் காலை, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து,  குளித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, உங்களால் முடிந்த நைவேத்தியத்தை, வெறும் கற்கண்டாக இருந்தாலும் சரி, அதை படைத்து, சம்மணம் போட்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, பிரம்மதேவனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். காலை 6 மணிக்கு முன்பு. உங்களுக்கான மந்திரம் இதோ..

‘ஓம் பிரம்ம தேவாய நமஹ’

இந்த மந்திரம் எல்லோரும் அறிந்த மந்திரமாக இருந்தாலும், குறிப்பிட்ட இந்த தினத்தில் சொல்லுவதன் மூலம் இந்த மந்திரத்திற்கு அதிக பலன் கிடைக்கும் என்பது நம்மில் பலர் அறியாத விஷயம் தான். இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிக்க முடியவில்லை என்றால், முடிந்தவரை காலை 9 மணிக்கு முன்பாக உச்சரித்தால் தான் பலன். மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மீண்டும் 108 முறை உச்சரித்து, உங்களது வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் தலையெழுத்து எப்படிப்பட்டதாக இருந்தாலும் பிரம்மதேவனை நினைத்து சித்திரை மாத வியாழக்கிழமையில் மனதார வழிபட்டு வந்தோமே ஆனால், நிச்சயம் அந்த தலையெழுத்து மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழ்வை வளமாக்கும் இந்த மந்திரத்தை உச்சரித்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment