Tuesday, 24 September 2019

தோஷத்திற்கு செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா?

தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.


மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒரு பத்து நிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 

சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம் தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே... எல்லாம் நன்மைக்கே என்று கூறி, வழிபாடு செய்யுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment