மஹாளய தர்ப்பணத்தை மூன்று வழிகளில் செய்யலாம். அவை, பார்வனம், ஹிரணம், தர்ப்பணம் என. மூன்று முறைகளில் செய்யலாம்.
பார்வணம்: இந்த முறையில், ஆறு பேரை, வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். தந்தை, தாய், தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா, பாட்டி ஆகியோராக, இந்த ஆறு பேரையும் வரிக்க வேண்டும். அதன் பின், ஹோமம் செய்து, தர்ப்பணம் செய்து, அவர்களுக்கு சாப்பாடு போட்டு, தட்சிணை வழங்க வேண்டும்.
ஹிரணம்: இந்த முறையில், அரிசி, வாழைக்காய் முதலியவைகளை தந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தர்ப்பணம்: அமாவாசையில் செய்வது போல் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது. வேத விற்பன்னர்கள் சொல்லும் மந்திரங்கள், நமக்கு புரியாது.
அப்போது, மனதுக்குள், ‘என் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதரர், உறவினர் என எந்த வகையான உறவுக்கும் உட்படாத என், கோத்திர பிரிவுக்குள்ளும் வராத, எனக்கு தெரியாத பல ஆத்மாக்கள், இந்த பூமியில் வந்து மறைந்துள்ளனர். அவர்கள் எல்லாரும் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். அவர்கள், அடுத்த பிறவியில், அனைத்து நன்மைகளும் அடைய பிராத்திக்கிறேன்.’ என கூறிக் கொள்ள வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment