Friday, 20 September 2019

புண்ணியங்கள் பல தரும் புரட்டாசி சனிக்கிழமை  விரதம்.!!

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்தது. அதிலும், புரட்டாசி சனிக்கிழமைகள், பெருமாளுக்கு சிறப்பானது. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில், மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். 

சனிபகவானல் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. 

புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால்,  தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். 
புரட்டாசியில் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்று, படையல் படைத்து வழிபடுவது சிறப்பு. திருப்பதி பெருமாளை, புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். 

புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை ,முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து, மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்யலாம். 
துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. 
பச்சரிசி மாவை, தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால், வறுமை நீங்குவதோடு வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment