மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் ஒவ்வொன்றிலும், தலா இரண்டரை ஆண்டுகள் அமர்ந்து, அந்தந்த ராசிக்காரர்களுக்கு பலன்களை வழங்குபவர், சனி பகவான். வரும் 2020 ஜனவரி மாதம், 24ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது.
பொதுவாக ஜோதிடத்தில் பெரிய கிரகங்களாகவும், ஜாதகர்களின் வாழ்வில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும் கிரகங்களாக கருதப்படும் குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 3 மாத இடைவெளியில் அடுத்தடுத்த ராசிகளுக்கு இடம் பெயர்வதால், 12 ராசிக்காரர்களுக்கும், பல்வேறு மாற்றங்களை எதிர் பார்க்கலாம்.
குரு பகவானின் ஆட்சி வீடான தனுசில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்த சனிபகவான், அடுத்ததாக, தன் சொந்த வீடான, மகரத்திற்கு செல்கிறார். இது, சனியை சொந்த வீடாக உடைய ராசிக்காரர்கள், ஜாதகத்தில் சனி, உச்சம் பெற்ற ஜாதகர்கள், சனியின் அமைப்பு நல்ல வகையில் உடையோருக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
தவிர, மகரத்தில் அமர்ந்து சனி பார்க்கும் ராசிகளுக்கும் அதற்கேற்ற பலன்கள் இருக்கும். குறிப்பாக, விருச்சிக ராசிக்காரர்களுக்கு இத்துடன், ஏழரை சனி முடிவடைகிறது. தனுசு ராசிக்கு பாத சனியாகவும், மகர ராசிக்கு ஜென்ம சனியாகவும் அமர்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு, 2020 ஜனவரி முதல் ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது.
சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அதன் தாக்கம் ஏற்கனவே தொடங்கியிருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்க வாய்ப்புள்ளது என்பதை சற்று முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அதே போல் சுப நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டு நடத்தலாம்.
இந்த சனிப் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன பலன்களை அடையப்போகிறார்கள் என்பதை வரும் நாட்களில் தொடர்ந்து பார்க்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment