Wednesday, 3 July 2019

திருமண தடை நீங்க விரதம்.!!

இக்காலங்களில் திருமணம் வயது வந்த பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதற்கான விரதத்தை அறிந்து கொள்ளலாம்.


மனதிற்கினிய திருமண வாழ்க்கை, வசதிகள் நிரம்பிய சொந்த வீடு ஆகிய இந்த இரண்டும் அனைவரின் வாழ்வில் நிறைவேற வேண்டிய அதிகபட்ச ஆசைகளாக இருக்கிறது. இக்காலங்களில் திருமணம் வயது வந்த பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதே போன்று பலருக்கும் தாங்கள் வசிப்பதற்கு சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எனினும் சராசரியான வருமான நிலை, அதிக கடன் சுமை போன்றவற்றால் சொந்த வீடு கனவு பலருக்கும் நிறைவேறாமல் போகிறது. 

மேற்கண்ட இரு விடயத்திலும் நாம் எவ்வளவுதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை நிறைவேறுவதற்கு தெய்வத்தின் அனுக்கிரகம் கட்டாயம் தேவைப்படுகிறது. பக்தியோடு வணங்குபவர்களின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் பெண் தெய்வ வழிபாடு பூர்த்தி செய்கிறது. அதிலும் அம்பாள் வழிபாடு அனைவரின் வாழ்விலும் ஏற்றமிகு பலன்களை ஏற்படுத்தவல்லதாகும். 

ஏதேனும் ஒரு அம்பாள் கோயிலுக்கு விரதம் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற புடவை சாற்றி வழிபாடு செய்வதால் உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறத் தொடங்கும். நீண்ட காலமாக திருமணமாகாமல் தவித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கேற்ற வரன் அமைந்து இனிமையான இல்லற வாழ்க்கை உண்டாகும். கொண்டு சொந்த வீடு கட்டும் விருப்பம் கொண்டவர்களுக்கு அவை விரைவில் நிறைவேறும்.

இந்த விரதத்தை 5, 9, 11 வாரங்களும் தொடர்ந்து செய்து வரலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment