நந்தீஸ்வரரை வணங்கும் நேரத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம்.
சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்திதேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் ‘எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்’ என்று பொருள். நந்தி தேவரை சிவன் கோவிலில் மட்டுமே நாம் பெரும்பாலும் காண இயலும். இவரை வணங்குகையில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் பயனாக பல அறிய பலன்களை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.
நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்
பொது பொருள்: பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை நித்தமும் வணங்குவதன் பலனாக என்னை காத்து என் மனதை தூய்மை படுத்த வேண்டுகிறேன்.
நந்தீஸ்வரரை வணங்கும் நேரத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment