Monday, 3 June 2019

திங்கள் கிழமை அமாவாசையில் அரசமரத்தை வலம் வந்தால் சொல்வதெல்லாம் பலிக்கும்.!!

இன்று 3.6.2019 அமாவாசை திங்கள் கிழமைகளில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது என்கிறது குருசிஷ்ய அனுபவ சாஸ்திரம். இன்றைய தினம் சிவபெருமானின் பஞ்சாட்சர நட்சத்திரமான நமசிவாய மந்திரத்தை உச்சரித்தப் படி அரசமரத்தை 108 முறை வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி வழிபட்டால் பெறுவதற்கரிய பேறு கிடைக்கும் என்பது ஐதிகம்.
திங்கள் கிழமை வரும் அமாவாசை சோமவார அமாவாசை, அமாசோமப் பிர தட்சனம், அரசமர நாராயண விரதம் என்றும் அழைக்கிறார்கள். திங்கள் கிழமை அமாவாசையன்று அரசமரத்தை சுற்றி வழிபட்டால் வாக்கு வன்மையும் ஆன்ம பலமும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். அதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாம்.

விசித்தரபுரி நாட்டின் மன்னன் இந்திரசேனனின் மனைவி தாட்சாயிணிக்கு கொடுமையான நோய் ஒன்று தாக்கியது. அரண்மனையில் இருந்த வைத்தியர்கள் என்ன செய்தும் அதைத் தீர்க்க முடியவில்லை. பக்கத்து, தூர தேசத்தில் இருந்த வைத்தியர்கள் எல்லாம் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் யாராலும் இளவரசியின் நோயை குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக மன்னன் இளவரசியின் விநோத நோயைக் குறிப்பிட்டு யாராவது இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்று முழக்கமிட செய்தான்.
ஆலயதரிசனத்துக்காக அந்த ஊருக்கு வந்த துறவியின் காதுகளில் இது விழவே அவர் அரண்மனையை நோக்கி சென்றார். என்னால் மகாராணியைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நான் அவர்களைப் பார்க்கலாமா என்று கேட்டான். அரசர் மகிழ்ச்சியோடு துறவியை அரசியிடம் அழைத்துச் சென்றார்.

மருந்துகள் கொடுக்கலாம் என்றாலும் நோய் என்னவென்று கண்டறிய முடியவில்லை என்று வருந்தினார் அரசர். துறவி மகாராணியாரைச் சந்தித்தார். அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். பிறகு மன்னரை அழைத்து அரசே இந்த ஊரில் வெட்டியான் மனைவியை அழைத்து வரச் சொல்லுங்கள் என்றார். அரசனும் ஏன் எதற்கு என்று கேட்காமல் காவலாளிகளை விட்டு அவரை  அழைத்து வர சொன்னார்.
நடுங்கியபடி வந்த வெட்டியானின் மனைவி அரசரை வணங்கி ”ஐயா, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்னை எதற்காக அழைத்தீர்கள்?” என்றாள். அரசர் அவளை துறவியிடம் அழைத்துச்சென்றார்.

துறவி அவளைப் பார்த்து ”கவலைப்படவேண்டாம் மகளே ராணியைப் பார்த்து நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார். பயந்து கொண்டே துறவி சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே கூறினாள் அந்தப் பெண்மணி. ”மகளே இதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன். நீ கிளம்பலாம்” என்றார். அரசருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ராணி குணமாகினாலே போதும் என்று தோன்றியது. சில நாள்களிலேயே ராணி அதிசயத்தக்க வகையில் குணமடைந்து வந்தாள். எத்தனை மருந்துகள் கொடுத்தும் தீராத வியாதி எப்படித் தீர்ந்தது என்று கேட்டார் அரசர். 
திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வருபவர்களின் வாக்குவன்மை மிகவும் அதிகமாக மேம்படும், ஆன்ம பலமும் பெருகும். இது அவர்களுக்கு இயற்கை தரும் மிக உயர்ந்த சன்மானம். என்னுடைய ஞானதிருஷ்டியின் மூலம்  உங்கள் நாட்டில் யார் இதைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

வெட்டியான் மனைவி தான் செய்திருந்தாள். அதனால் தான் அவளை வர வழைத்து  ராணியாருக்கு சிகிச்சை கொடுத்தேன். சுயநலம் கருதாது பொது நலன் கருதுபவர்கள் அமாவாசையன்று அரச மரத்தை வலம் வந்து வாக்கு வன்மையைப் பெறலாம். என்றார்.
இன்று திங்கள் கிழமை அமாவாசை. வாக்குவன்மை பெறவும்,  மனதில் ஆன்ம பலம் அதிகரிக்கவும் வேப்பமரம் அல்லாத அரசமரத்தை 108 முறை வலம் வாருங்கள். நினைத்ததெல்லாம் நடக்கும். சொல்பவையெல்லாம் பலிக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment