Monday, 24 June 2019

மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்.!!

ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சென்னை ஆழ்வார்பேட்டை- அபிராமபுரம் பீமண்ண முதலி 2-வது தெருவில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் அளவில் மட்டுமே அந்நத சன்னதி மிக, மிக சிறியதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த நரசிம்மர் தரும் பலன்களோ, மிக மிக பெரியது, அளவிடை முடியாதது.

இந்த நரசிம்மரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டுதல் உள்ளதோ, அதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த நரசிம்மர் சன்னதியில் சிறிய மணியை கட்ட வேண்டும். அந்த சிறிய மணியை ஆலய அர்ச்சகரே பூஜை செய்து தருவார். மணி கட்டிய ஒரு மண்டலத்துக்குள் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறி விடும்.

அதன் பிறகு அந்த ஆலயத்துக்கு சென்று நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். சென்னையில் உள்ள மிக சக்தி வாய்ந்த இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் நிறைய வைணவ பக்தர்களுக்கே தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment