Thursday, 27 June 2019

அருமறையின் உச்சிதனில் நின்றார்.!!

வரதராஜப் பெருமாள் தோன்றிய விதத்தை வேதாந்த தேசிகன் பாடுகிறார். சூரியன் முன் மற்ற விளக்குகளின் ஒளி எடுபடாமல் போவதைக் காண்கிறோம். ஆனால் வரதராஜப் பெருமாளின் ஒளிக்கு முன்னால் பகலவனான சூரியனே பகல்விளக்காகி விட்டானாம்! அப்போது வைகுண்டத்திலுள்ள நித்தியசூரிகள் வரதராஜப் பெருமாளைப் போற்றிப் பாடினார்கள்.


“பெருமையுடை அத்திகிரிப் பெருமாள் வந்தார்!
பேராத அருள்பொழியும் பெருமாள் வந்தார்!
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்!
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார்!
திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்!
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்!
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்!
வானேற வழிதந்தார் வந்தார் தாமே!”

இப்பாடலின் பொருள்: மிக்க பெருமை கொண்டவரான வரதராஜப் பெருமாள் வந்தார்! நீங்காத கருணை மழை பொழியும் பெருமாள் வந்தார்! அருமையான வேதாந்தம் போற்றும் பெருமாள் வந்தார்! வேத சொரூபியாய் விளங்குபவர் வந்தார்! சொல்லும் பொருளும் போல் திருமகளுடன் இணைந்து நிற்கும் திருமால் வந்தார்! தன் கருணையால் உலகுக்குச் சிறந்த சாஸ்திரங்களைத் தந்தவர் வந்தார்! பக்தியில்லாதவர்களை மயக்க வல்லவரான மாயன் வந்தார்! பக்தர்கள் அனைவரும் வைகுண்டத்தை அடைய வழிகாட்டும் வரதர் வந்தார்!

“அத்திகிரி அருளாளப் பெருமாள் 
வந்தார்!
ஆனைபரிதேரின் மேல் அழகர் வந்தார்!
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருதவரம்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்!
முத்திமழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்!
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்!
உத்திரவேதிக்குள்ளே உதித்தார் 
வந்தார்!
உம்பர்தொழும் கழலுடையார் வந்தார் தாமே!”

இப்பாடலின் பொருள்: “ஹஸ்திகிரி எனப்படும் காஞ்சியில் குடிகொள்ள வரதராஜப் பெருமாள் வந்தார்! யானை, குதிரை, தேர் ஆகிய வாகனங்கள் மீது அழகுமிக்க பெருமாள் வந்தார்! பார்வையற்றோர்க்குக் கண்ணைக் கொடுக்கும் பெருமாள் வந்தார்! கேட்பவர் கேட்ட வரத்தைக் கேட்டபடி கேட்டவுடன் தரும் பெருமாள் வந்தார்! முக்தி மழையைப் பொழியும் மேகம் போன்றவர் வந்தார்! ஆதிமூலமே என்று அழைத்த யானையைக் காத்த பெருமாள் வந்தார்! பிரம்மாவின் உத்திரவேதியில் வந்து தோன்றிய பெருமாள் வந்தார்! தேவர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர் வந்தார்!” என்றெல்லாம் வரதராஜப் பெருமாளின் வருகையை நித்தியசூரிகள் கொண்டாடினார்கள்.b காஞ்சிபுரத்தில் ஹரிதவாரண ப்ருத்யர் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் திருக்கச்சி நம்பிகளின் உறவினர். அவர் பிறவிக் குருடராக இருந்ததாகவும், வரதராஜப் பெருமாளின் அருளால் அவர் பார்வை பெற்றதாகவும்,

ஹரிதவாரணப்ருத்யஸமாஹ்வயம் கரிகிரௌ வரதஸ்த்வம் அபூர்விகாம்
த்ருசம் அலம்ப்ய ஏவ ஹி ஸுந்தர ஸ்புடமதாச்ச வரான் சதம் ஈத்ருசான்

என்ற ஸ்லோகத்தில் கூரத்தாழ்வான் தெரிவித்துள்ளார்.இவ்வாறு உத்திரவேதியில் காட்சியளித்த வரதர், “பிரம்மனே! உங்களுக்குத் தியானம் கைகூடுவதற்கு இடையூறாக இருந்த அனைத்துப் பாபங்களும் விலகிவிட்டன. இனி வரதனாக உங்களுக்கு நான் காட்சி தந்த இந்த உருவத்தை நீங்கள் இடைவிடாது தியானித்து சித்தி அடையலாம்!” என்று கூறினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment