Thursday, 6 June 2019

சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்.!!

சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.

நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ. 

சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம் 

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே 
ஸிவ பக்தாய தீமஹி 
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். 

மேலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் திருடர்களால் களவாடப் படாமல் தடுக்கும். விசாரசருமன் என்கிற தீவிர சிவ பக்தன் முற்காலத்தில் வாழ்ந்து வந்தான். தனது சிவபக்திக்கு இடையூறு ஏற்படுத்திய தன் தந்தையையே தாக்கியதால், அவன் பக்திக்கு மனம் குளிர்ந்து அவன் முன்பு தோன்றிய சிவபெருமான் மற்றும் பார்வதி, சிவகணங்களை நிர்வகிக்கும் சண்டிகேச பதவியை தந்தருளினார். அத்தகைய அதிதீவிரமான சிவதொண்டனாக மாறிய சண்டிகேஸ்வரரை வணங்குவதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment