Sunday, 2 June 2019

பரிவார தலங்களுடன் திருவிடைமருதூர்.!!

ஆகம முறைப்படி விதிப்படி ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறைமகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள்.

மனஅமைதி பெற தெய்வம் மற்றும் ஆலய வழிபாடு முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டு தான் அந்தக் காலத்தில் மாபெரும் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அரசர்கள் ஆகம முறைப்படி பல ஆலயங்களைப் பாரத தேசமெங்கும் நிர்மாணித்துள்ளார்கள்.
ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.

இந்த ஆகம முறைப்படி-விதிப்படி-ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறைமகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால் இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது.

திருவலஞ்சுழி ஆலயம் திருவிடைமருதூர் மகாலிங்கத்துக்கு ஸ்ரீ விக்னேச்வரர் சந்நிதி, சுவாமிமலை ஸ்ரீ சுப்ரமணிய ஷேத்ரம், திருவிடைமருதூருக்கு 10 மைல் தெற்கில் உள்ள திருவாலங்குடி தட்சிணாமூர்த்தி ஷேத்ரம், இடைமருதூருக்கு நேர் வடக்கில் உள்ள திருஆப்பாடி என்பது சண்டேச்வரர் கோவில், சண்டேச்வர நாயனார் சேய்ஞலூரில் அவதாரம் செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. 

திருவிடை மருதூருக்கு நேர் கிழக்கே உள்ளது திருவாவடுதுறை. அது நந்தி ஷேத்ரம். திருவாரூரில் சோமஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர், மாந்துறை எனப்படும் சூரியனார் கோவில் சூரிய பகவானுக்குரிய ஷேத்ரம். இவ்வாலயத்தில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment