பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் விரதம் இருந்து சிவன் கோவிலில் நந்தி பகவானை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நமது குல சாபங்கள் தீரும்.
சிவபெருமானின் வாகனமாகவும், சேவகனாகவும் இருப்பவர் நந்தி பகவான். சிவன் கோயிலில் சிவபெருமான், அம்பாளை வழிபடுவதற்கு முன்பாக அவர்களுக்கு காவலனாக இருக்கும் நந்தி பகவானை வணங்கி சிவபெருமானை வணங்குவதே முறையாகும். தமிழ் சித்தர் பரம்பரையில் நந்தீசர் என்கிற பெயர் கொண்ட சித்தர் சிவபெருமானின் சேவகனான நந்தி பகவான் தான் என பலரும் கருதுகின்றனர். எப்படி இருந்தாலும் நந்தி பகவானை விரதம் இருந்து வழிபடுவதால் சிவன் மற்றும் பார்வதியின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கும்.
பொதுவாக சிவன் கோவிலில் சிவனை வழிபடும் போது நந்தி பகவானையும் வழிபடுகின்றனர். நந்தி பகவானை விசேஷமாக வழிபடும் ஒரு தினமாக மாதந்தோறும் வருகின்ற பிரதோஷங்கள் இருக்கின்றன. இத்தினத்தில் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவன் கோயிலில் சோமசூக்த பிரதட்சணம் வலம் வந்து, சிவனையும் நன்றியும் வழிபட்டு நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, அரிசியில் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து, பால், தேன் மஞ்சள் ஆகியவற்றை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து, வாசம் மிக்க மலர்களின் மாலை சாற்றி, பிரதோஷ நேரத்தில் நந்தி பகவான் சன்னிதியில் இருந்து சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் நேரத்தில் நந்தி பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வணங்குவதால் நாம் வேண்டிய அனைத்தும் வாழ்வில் கிடைக்க நந்தி பகவான் அருள் புரிவார்.
பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் விரதம் இருந்து சிவன் கோவிலில் நந்தி பகவானை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நமது குல சாபங்கள் தீரும். மனதில் எழும் தீய எண்ணங்கள் அறவே நீங்குகின்றன. நமக்கும் சக மனிதர்களுக்கும் இடையே பகை ஏற்படாமல் காக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு அமைகிறது. நீண்ட நாட்களாக கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் தேற வழிவகுக்கிறது. வறுமை நிலை ஏற்படாமல் காக்கிறது. ஆன்மீக ஞானம் பெருகுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment