புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளை பற்றியும் இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
சகுந்தலா
விஸ்வாமித்திரர் முனிவருக்கும், தேவலோக கன்னிகையான மேனகைக்கும் பிறந்தவள்தான் சகுந்தலா. தன் தவத்தை கலைத்ததோடு, இச்சைக்கு ஆளாக்கி விட்ட காரணத்தால் கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், மேனகையின் மீது கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். மேனகை தனக்கு பிறந்த பெண் குழந்தையோடு தேவலோகம் செல்ல முடியாத காரணத்தால், ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் குழந்தையை விட்டுச் சென்றாள்.
கன்வா என்ற முனிவர், அந்தக் குழந்தையை கண்டெடுத்து சகுந்தலா என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கன்வா தான் சகுந்தலாவை விஸ்வாமித்திரரிடம் ஒப்படைத்தார். சகுந்தலாவிற்கு, அரசன் துஷ்யந்தனுடன் திருமணமானது. அவர்கள் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தனர். மகாபாரதத்தில் அவர்கள் பிரிந்தது பற்றியும், மீண்டும் இணைந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற காளிதாசத்தில் இந்தக் கதை இவ்வாறு கூறப் பட்டுள்ளது. அதாவது, தனது ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாச முனிவரை, தன் கணவனின் நினைவில் இருந்ததால் கவனிக்க தவறிவிட்டாள் சகுந்தலா. தன்னிலை மறந்து இருந்த சகுந்தலையின் மீது கோபம் கொண்ட துர்வாசர், “உன் கணவனின் நினைவில் இருந்து நீ நீங்கிவிடுவாய்” என்று சாபமிட்டார்.
தன் தவறை எண்ணி வருந்திய சகுந்தலை, துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். உடனே துர்வாசர், “உங்கள் உறவின் அடையாளமான மோதிரத்தைக் காட்டினால், துஷ்யந்தன் உன்னைப் பற்றி அறிந்து கொள்வான்” என்று சாப விமோசனமும் கூறி அருளினார்.
ஆனால் துஷ்யந்தன் அளித்திருந்த மோதிரத்தை, ஆற்றில் குளிக்கும் போது சகுந்தலை தவறவிட்டு விட்டாள். அதைக் காட்டி அரசருக்கு பழைய நினைவுகளைக் கொண்டுவர முடியாததால் சகுந்தலை மிகவும் வருந்தினாள். ஆற்றுக்குள் விழுந்த மோதிரம் ஒரு மீனால் விழுங்கப்பட்டது. அந்த மீன், அரசனின் அரசவைக்கு வந்தது. அதில் இருந்து மோதிரத்தைப் பார்த்ததும் துஷ்யந்தனுக்கு சகுந்தலை பற்றிய நினைவுகள் திரும்ப வந்தன. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.
சுமித்ரா
அயோத்தியை ஆட்சி செய்த தசரத மன்னனின் மூன்று மனைவிகளில் சுமித்ராவும் ஒருத்தி. இவள் லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகி யோரின் தாய் ஆவாள். சுமித்ரா, தசரதனின் மூன்று மனைவிகளில் விவேகம் கொண்டவராக இருந்தாள். அவள் ராமன், மகாவிஷ்ணுவின் மற்றுமொரு அவதாரம் என்பதை உணர்ந்திருந்தாள். அதனால் தான் ராமனுடன் எப்போதும் இருக்கும்படி லட்சுமணனை தயார் செய்தாள். ராமன் காட்டிற்கு செல்லும் போது கூட, அவரோடு லட்சுமணனையும் காவலுக்கு அனுப்பிவைத்தாள்.
சுகுமாரா
மகாவிஷ்ணுவை போற்றிப் பாடல்கள் பாடிய கவிஞராக சுகுமாரா போற்றப்படுகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் இயற்றிய ‘ஸ்ரீ கிருஷ்ண விலாசம்’ மற்றும் ‘சமஸ்கிருத காவியம்’ ஆகிய நூல்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதில் சமஸ்கிருத காவியம் 12 படலங்களாக மிகவும் எளிமையாகவும், இனிமையான வார்த்தைகளைக் கொண்டதாகவும் பாடப்பட்டிருக்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் 10-வது காண்டத்தை பின்பற்றி இவர் கிருஷ்ணரின் கதையை எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் அனைத்தும் கேரளாவில் மிகவும் பிரபலமானவை ஆகும்.
சுக்ரன்
பிருகு முனிவரின் மகனாக பிறந்தவர் சுக்ராச்சாரியார். இவரை சுக்ரன் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.
பிருகு முனிவரின் மகனாக பிறந்தவர் சுக்ராச்சாரியார். இவரை சுக்ரன் என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர் ஆங்கீரஸ முனிவரிடம் இருந்து வேதங்களையும், சாஸ்திரங்களை நன்கு கற்றவர். சுக்ரனும், குரு என்று அழைக்கப்படும் பிரகஸ்பதியும் கல்வி கற்கும் போது தோழர்களாக இருந்தவர்கள். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
பிரகஸ்பதி, தேவர்களின் குருவாக இருந்து அவர்களை வழிநடத்தினார். சுக்ரன், தேவர்களை எதிர்த்து போரிடும் அசுரர்களின் குருவாக மாறினார். தேவர்கள் அதிக அளவில் இறந்து கொண்டிருந்த நேரத்தில், அரக்கர்கள் இறந்தாலும் உயிர்ப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் சுக்ராச்சாரியார் கற்று வைத்திருந்த சஞ்சீவினி மந்திரம் தான். அதை உச்சரித்து தான் அவர் அசுரர்களை காப்பாற்றிக்கொண்டிருந்தார்.
எனவே தேவர்களில் இருந்து ஒருவர், சுக்ராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்து, அந்த மந்திரத்தை கற்று வரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. யாரும் முன்வராத நிலையில், பிரகஸ்பதியின் மகன் கன்சா, அதற்கு ஒப்புக்கொண்டான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்து அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு வந்தான். சுக்ரன் எழுதிய நூல் ‘சுக்ர நீதி’ என்று அழைக்கப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment