Friday, 17 May 2019

வேடனுக்கு காட்சி தந்த நரசிம்மர்.!!

கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆதிசங்கரருடைய சீடன் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். தியானத்தில் அடிக்கடி ஈடுபடுவார். 

ஒருவேடன் அவரிடம் தவமிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று அவரைக் கேட்ட போது அவனுக்குப் புரிய வேண்டி, ஓர் அதிசய மிருகத்தைத் தேடி வந்து தியானம் செய்கிறேன் என்றார்.

வேடன் விலங்கின் அடையாளம் கேட்க மனித உடம்பும் சிங்க முகமும் கொண்டது என்று கூற, வேடனும் காடெங்கும் தேடி கிடைக்காததால் காட்டுக் கொடிகளைக் கொண்டு தூக்குப் போட்டு இறக்க முனைந்த போது வேடன் முன் நரசிம்மர் தோன்றினார். காட்டுக் கொடிகளைக் கொண்டு அவரைக் கட்டி, வேடன் பத்மபாதர் முன் கொண்டு வந்து காட்டினார். வேடன் கண்ணுக்குப் புலப்பட்ட நரசிம்மர் பத்மபாதர் கண்ணிற்குத் தெரியவில்லை. வேடன் செய்வதறியாது திகைத்த போது நரசிம்மர் கர்ச்சனை செய்து குரல் ஒலிமூலம் அவருக்குப் புலப்படுத்தினார் என்று கூறுவர். 

இதே பத்மபாதரை இரண்டு முறை சாவிலிருந்து நரசிம்ம சுவாமி மீட்டதாகவும் கூறுவர். ஆதிசங்கரரும் நரசிம்மர் மீது கராவலம் என்ற நூலை இயற்றியுள்ளார். 
பெரிய பெருமாள் மகாவிஷ்ணுவை பெருமாள் என்றழைப்பார். பெருமாள் என்றால் பெரிய ஆள் என்று அர்த்தம். ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மகிழ்தல் ஆகிய அனைத் துப் பணிகளையும் செவ் வனே செய்து முடித்து பூர்ணத்துவமான அவதாரமாக விளங்குவதால் நரசிம்மருக்கு பெரிய பெருமாள் என்ற பெயரும் உண்டு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment