Friday, 17 May 2019

மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி ஆலய சிறப்பு தெரியுமா.!!

தேவி கங்கம்மா என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில், பெங்களூரிலுள்ள யஷ்வந்பூர், மல்லேஸ்வரம் 15 குறுக்கு தெருவில், உள்ளது.


இந்து புராணத்தில் கூறப்பட்டிருக்கும்தெய்வங்களில் மக்களுக்கிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே தெய்வம், நதிஅன்னை கங்காதேவி தான் என்கிறார்கள்.தொன்மை, தூய்மை பக்தி இவற்றின்அடையாளமாக அருள்பாலித்திருக்கும் தேவி கங்கம்மாவைத் தரிசிக்கவென பலபகுதிகளிலிருந்தும் மக்கள் தேடி வருகிறார்கள். வெள்ளிக் கிழமைகளில்இக்கோவிலில் கூட்டம் அதிகமாககாணப்படும்.

2004 ஆம் ஆண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. ஆனால் 1928 லிருந்து மாரியம்மா- கங்கம்மா-வழிபாடாக பெங்களூரில் ஒவ்வொருவருடமும் மே மாதத்தில் திருவிழாகோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.  இந்த வருடம் மே மாதம் 9 ஆம்தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரைகோலாகலமாக கொண்டாடப்பட்டது.அப்பொழுது பால்குடம் எடுத்து ஊர்வலமாகவந்து அன்னைக்கு பாலாபிஷேகம்செய்வார்கள். கரகம், சண்டை மேலும் புலிஆட்டம் ஆகியவை ஊர்வலத்தில்சிறப்பம்சங்களாக இருக்கும். பெண்வேடமிட்டு ஆண்கள் ஊர்வலத்தில் வலம்வருவர். திருவிழாவின்போது அன்னதானம்பெரிய அளவில் பள்ளி மைதானங்களில்நடத்தப்படும்.
இங்கு பல்வேறு கோரிக்கைகளோடுதேவியைத் தரிசிக்க வருகின்ற பக்தர்கள்பயபக்தியோடு அர்ச்சகரிடம் பூஜைக்குரியமலர்களைத் தர அவர் அவற்றை தேவியின்சிரசின் மீது சமர்ப்பிக்கிறார். சிறிதுநேரத்தில் அந்த மலர்கள் தானாகவே கீழேவிழுகின்றன. தாங்கள் கொடுத்த மலர்கள்தேவியின் காலடியில்  வலப்புறம் விழுந்தால்கோரிக்கை உடனடியாக நிறைவேறும்;நடுவில் விழுந்தால் சற்றுத் தாமதமாகும்;இடப்புறம் விழுந்தால் கோரிக்கைநிறைவேற  வாய்ப்பில்லை, மாற்று திட்டம்மேற்கொள்ளலாம் என்று தேவி அருள்வதாகபக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயத்தில் இந்த மலர் கோரிக்கைமிக முக்கியமான வழிபாடாகக்கருதப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment