Wednesday, 15 May 2019

விளக்கின் முன் அமர்ந்து பாட வேண்டிய பாடல்.!!

பெண்கள், தினமும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இல்லங்களில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.

“விளக்கே! திருவிளக்கே, வேந்தன் உடன்பிறப்பே
சோதிமணி விளக்கே! ஸ்ரீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!

காந்தி விளக்கே! காமாட்சி தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்து பஞ்சுத் திரி போட்டு
குளம்போல் எண்ணெய் விட்டு கோலமுடன்
ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க”

விளக்கின் முன்வைக்கும் தேங்காய் மற்றும் பழ வகைகளை, சுமங்கலிக்கு கொடுத்து, நாமும் சாப்பிடலாம். திருவிளக்கு பூஜையை வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செய்து வழிபட்டால் அஷ்டலட்சுமியின் அருட்பார்வை முழுமையாக கிடைக்கும்.

வீடுகளில் விளக்கு பூஜை செய்ய இயலாத சுமங்கலிப் பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆடி மாதங்களில் கோவில்களில் நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்துகொண்டால் சுமங்கலி பாக்கியம் அமையும். வாழ்வில் சுகங்களும், சந்தோஷங்களும் நிறையும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment