சிவனடியார்களே நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவருமே சிவத்தொண்டே உயிர்நாதம் என்று வாழ்ந்தவர்கள். சிவ பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவத்தொண்டுக்காகவே தங்களை கரைத்துக் கொண்டவர்கள். திருத்தொண்டர் புராணத்தில் சுந்தர மூர்த்தியார் 60 சிவனடியார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதை மையமாக கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை இயற்றிய சுந்தரமூர்த்தி, அவரது பெற்றோர்கள் சடையனார் - இசைஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து 63 நாயன் மார்களாக்கி விரிவாக எடுத்துரைத்தார். நாயன்மார்களின் வரலாறு பெரிய புராணம் என பெயர் பெற்று 12 ஆம் திருமுறையாக திகழ்கிறது.
சிவாலயங்களில் நாயன்மார்கள் 63 பேருக்கும் சுற்றுப்பிரகாரங்களில் கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சுந்தர மூர்த்தி எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் 60 நாயன்மார்கள் மட்டுமே இருந்தனர். 60 என்ற எண்ணிக்கை ஒரு மகத்துவம் பெற்றது. அன்றாடம் நாம் சந்திக்கும் நேரக்கணக்கு கூட 60 ஐ அடிப்படையாக கொண்டதுதான். ஒரு விநாடிக்கு 60 நொடிகள். ஒரு நாழிகைக்கு 60 விநாடிகள், மனிதன் கொண்டாடுவது 60-வது பிறந்தநாள் விழா... ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது நாயன்மார்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனின் அருளைப் பெற பக்தி மட்டுமே போதும் என்பதை இவர்கள் வாழ்க்கை வரலாறு கூறுகிறது. நாயன்மார்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவ ரும், நாயன்மார் வரிசையில் இல்லாத மாணிக்கவாசகரும் நாயன்மார்களில் முதலாவதாக கருதப்படுகிறார்கள். இவர்கள் நால்வரையும் சைவ சமய குரவர்கள் என்று அழைக்கிறோம். நாயன்மார்களை வகைப்படுத்தும் போது அவர்களது காலம், குலம், அவர்கள் வாழ்ந்த நாடு, அவர்களது இயற்பெயர் மற்றும் காரணப்பெயர் என பலவகைகளில் இவர்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
63 நாயன்மார்களில் மூன்று பேர் பெண்கள். பெருவாரியான நாயன்மார்கள் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்ததாக தொண்டை நாட்டில் 8 நாயன்மார்கள் இருந்தனர். 63 நாயன்மார்கள் மூன்று விதமாக முக்தி அடைந்ததாக சொல்லப்படுகின்றன. குருவருளால் முக்தி பெற்றவர்கள் 11 நாயன்மார்களும், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் 31 நாயன்மார்களும், அடியாரை வழிபட்டதற்காக 21 நாயன் மார்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இந்த நாயன்மார்கள் பிறந்த தலம் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அவதாரத்தலங்கள் தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் உள்ளன. அரசக்காலத்தில் நாயன்மார்களுக்கென்று பிரத்யேகமான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றையும் தொடர்ந்து பார்க்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment