நவகிரக தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் சில எளிய பரிகாரங்கள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு, 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்த பயன்படுத்துதல் சுக்ரனை பலப்படுத்தும்.
நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல், சனி மற்றும் புதன் பாதிப்பில் இருந்து விலக்கும்.
தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால் குருவருள் கிடைக்கும்.
கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போட்டால், சந்திரனின் பலனைப் பெறலாம்.
வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும், தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்க செய்யும்.
தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தை கூட்டும்.
16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது பிரீதிக்கு உகந்தது.
அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப்பயிறை நீரில் இட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்ரனின் அனுக்கிரகம் கிடைக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment