புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றியும் இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.
சூர்ப்பணகை
இவள், இலங்கை வேந்தன் ராவணனின் சகோதரி. ஒருமுறை தண்டகாரண்ய வனத்தில் சுற்றிக் கொண்டிருந்த சூர்ப்பணகை, அங்கு ராமனைக் கண்டு காதலில் விழுந்தாள். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி ராமனை, சூர்ப்பணகை வற்புறுத்தினாள். ஆனால் ராமன் மறுத்தான். இந்த நிலையில் சூர்ப்பணகை, சீதாதேவியை கோபப்படுத்த முயற்சித்தாள். அதைக் கண்டு ஆத்திரம் கொண்ட லட்சுமணன், சூர்ப்பணகையின் காது, மூக்கு ஆகியவற்றை வாளால் வெட்டினான். காயத்தோடு அங்கிருந்து விரைந்து சென்ற சூர்ப்பணகை, ராவணனிடம் நடந்ததைக் கூறினாள். தன் தங்கையின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்டு கொதித்துப் போன அவன், ராமனுடன் போரிட விரைந்தான்.
சூரியன்
சூரியன் கடவுளாக வணங்கப்படுகிறார். இவர் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், வானவெளியில் வலம் வருகிறார். இவரது மனைவியின் பெயர் சஞ்சனா. அவளால் தன்னுடைய கணவரின் வெப்பம் பொருந்திய ஒளிக்கதிர்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தனது தந்தையும், தேவலோக சிற்பியுமான விஸ்வகர்மாவிடம் கூறினாள். இதையடுத்து அவர் சூரியனின் வெப்ப ஒளிக் கதிர்களை எட்டுக் கூறுகளாக ஆக்கினார். அதில் இருந்து சில சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் தான், மகா விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் மற்றும் சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம் போன்றவை.
திலோத்தம்மா
உலகத்தின் மிகச் சிறந்த பொருட்கள் (உத்தமா), சிறிய துகள்கள் (திலம்சா) ஆகியவற்றை சேகரித்து, தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த அழகிதான் திலோத்தம்மா. இவள் தேவலோக கன்னிகைகளில் ஒருத்தியாக இருக்கிறாள். இவளது அழகு என்பது, உலகின் பரம்பொருளான சிவபெருமான் மற்றும் இந்திரனையே மயங்கச் செய்யும் அளவுக்கு பொலிவு கொண்டது. திலோத்தம்மா உருவாக்கப்பட்டதற்கு வலுவான காரணம் இருக்கிறது. சுண்டா, உப சுண்டா என்ற இரண்டு அரக்கர்கள் இருந்தனர்.
அண்ணன், தம்பிகளான அவர்கள் இருவரும் பாசத்தில் பிணைந்திருந்தனர். தங்களுக்குள் நடைபெறும் சண்டையால்தான் தாங்கள் இறக்க வேண்டும் என்று பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தனர். அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்துவதற்காகவே திலோத்தம்மா உருவாக்கப்பட்டாள். அவளது அழகில் மயங்கிய இரண்டு அசுரர்களும், தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று திலோத்தம்மாவை வற்புறுத்தினர். அவளோ, ‘இருவரையும் என்னால் திருமணம் செய்ய இயலாது. நீங்கள் இருவரும் உங்கள் வலிமையை வெளிப்படுத்துங்கள். யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றாள்.
காமம் கண்ணை மறைத்ததால், அதுவரை பாசமாக இருந்த இரண்டு அசுரர்களும் தங்களுக்குள்ளாகவே சண்டையிடத் தொடங்கினர். முடிவில் இருவருமே இறந்து போனார்கள்.
சுரசேனன்
சூரிய வம்சத்தினர்களால் ஆளப்பட்ட பகுதி மதுராபுரி அரசாங்கம். பின்னாட்களில் அது யது குல வம்சத்தினர் வசமானது. இதனை சத்ருக்ணன் மற்றும் அவனது மகன்கள் ஆட்சி செய்தனர். இந்த அரசாங்கத்தில் முதல் யது குல வம்ச அரசராக இருந்தவர் சுரசேனன். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் தந்தைதான் இந்த சுரசேனன். கிருஷ்ணரின் அத்தையாகவும், பாண்டவர்களின் தாயாகவும் இருந்த குந்தி சுரசேனனின் மகள் ஆவாள்.
சுரசை்
நாகர்களின் தாயாக விளங்குபவள், சுரசை. இவர் பிரஜாபதி தட்சனின் மகள் ஆவாள். அதோடு காசியப முனிவரின் 13 மனைவியர்களில் ஒருத்தியாக இருந்தவள். ஒரு முறை அனுமன், இலங்கைக்கு கடலின் மேல் பறந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடலுக்குள் இருந்த சுரசை, அனுமனை விழுங்க முயற்சித்தாள். அப்போது அனுமன் தன்னுடைய உடலை, 10 மடங்கு பெரிதாக்கினார். இதையடுத்து சுரசையும் தன்னுடைய உடலை 20 மடங்கு பெரியதாக்கினாள். அதில் இருந்தும் அனுமன் தப்பியதால், 100 மடங்கு பெரிய உருவம் எடுத்த சுரசை, அனுமனை விழுங்கினாள். ஆனால் அனுமன் கைரவில் அளவுக்கு சிறிய உருவம் எடுத்து, அவளது காது, வாய் வழியாக எட்டிப் பார்த்தார். அனுமனின் வலிமையை புரிந்து கொண்ட சுரசை, அனுமனை வாழ்த்தி அங்கிருந்து செல்ல அனுமதித்தாள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment