அட்சய திருதியை தினத்தன்று அரச மரத்தை 7 தடவை சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும். இத்தகைய வழிபாட்டை செய்தால் நாம் நினைக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
அட்சய திருதியை தினத்தன்று கருந்துளசியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துளசியால் மகாவிஷ்ணுவை ‘மதுத்விஷாய நம’ என்று சொல்லி 108 தடவை அர்ச்சிக்க வேண்டும். காலை, மாலை, இரவு என்று மூன்று நேரங்களிலும் இந்த அர்ச்சனையை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலனைத் தரும்.
சரி... அட்சய திருதியை தினத்தன்று பொதுவாக வழிபாடு எப்படி செய்யப்பட வேண்டும் தெரியுமா?
அன்று காலை எழுந்ததும் குளிக்க வேண்டும். ஏரி அல்லது வாய்க்காலில் தலை முழுவதும் நனையுமாறு குளிப்பது நல்லது. நீராடி முடித்ததும் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த குடத்து தண்ணீரை எடுத்துச் சென்று அரச மரத்தின் வேரில் விட வேண்டும். அரச மரத்தின் 4 பக்கங்களிலும் தண்ணீரை விட்டு சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தளி இருப்பதாக கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
குறிப்பாக அரச மரத்தை 7 தடவை சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும். அதன் பிறகு பசு மாடுகள் இருக்கும் இடம் சென்று பசு மாட்டுக்கும், பசுங்கன்றுக்கும் கழுத்தில் சொறிந்து கொடுத்து, சாப்பிட உணவு ஏதாவது கொடுக்க வேண்டும்.
இவற்றை செய்து முடித்த பிறகே பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீவிஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும். அப்போது ஸ்ரீவிஷ்ணுவை மாதவன் எனும் பெயரில் தியானித்து வழிபாடுகள் செய்தல் வேண்டும். அட்சய திருதியை தினத்தன்று இத்தகைய வழிபாட்டை செய்தால் நாம் நினைக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment