நாளை பிரதோஷம்... பிரதோஷ கால வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் சிவாலயதரிசனம் செய்த புண்ணியம் உண்டாகும்.
தான தர்மங்கள் செய்து பெறுவது ஒரு வகை புண்ணியம் என்றால்... இறைவனை உரிய காலத்தில் வணங்கி பெறுவது வேறு வகை புண்ணியம்...அத்தகைய புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு...
சிவப்பெருமான் பிரதோஷ காலத்தில் இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் ஆடினார் என்பதை அதிக முறை படித்திருக்கிறோம்... சிவப்பெருமானின் நடனத்துக்கு இந்திரன் புல்லாங்குழல் ஊதியதாகவும், சரஸ்வதி வீணை வாசித்ததாகவும், பிரம்மன் தாளமிட்டதாகவும் பிரதோஷ சிறப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் மகாவிஷ்ணு மிருதங்கம் வாசிக்க மகாலஷ்மி பாடியதாகவும் கூறுகிறது..
சிவப்பெருமானின் நடனத்தைத் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், அஷ்டதிக் பாலர்கள், யக்ஷர்கள், ரிஷிகள் அனைவருமே கண்டு பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டனர். தேவர்களே வழிபாடு செய்யும் பிரதோஷ காலத்தில் மனிதப்பிறவியான நாம் வழிபடுவதே கிடைத்ததற்கரிய பெரிய புண்ணியம் ஆகும்.
நாளை புதன் பிரதோஷம்.. நாளை விரதம் இருந்து அருகில் உள்ள சிவாலயங்களில் நந்திபகவானுக்கும், சிவனுக்கும் நடக்கும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு சிவநாமம் சொல்லுங்கள். மறக்காமல் அபிஷேகத்துக்கு பாலும், அலங்காரத்துக்கு அருகம்புல்லும் சாற்றி வழிபடுங்கள். வறுமை நீங்கும். பாவம் தீரும்.. மரண பயம் வராமல் முக்தி தருவார் எம்பெருமானாகிய சிவப் பெருமான்...அன்பே சிவம்… ஓம் நமசிவாய...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment