வரம் வேண்டும் வரம் வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் அகிலாண்டேஸ்வரனை நினைத்து தவம்புரிந்த சத்ததந்து என்னும் அசுரன், இறைவனிடம் பெற வேண்டிய அனைத்து வரங்களையும் பெற்றான்.. ஆசையை அடக்கி ஆள அவ்வளவு எளிதில் முடியுமா என்ன? இவனுக்கும் ஆசை வந்தது.. உலகை ஆளும் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா? என்னாலும் முடியும் என்ற மமதை சத்ததந்துக்கு உண்டாயிற்று..
தட்சனைப் போன்று பெரிய யாகம் நடத்த மேருமலைக்குச் சென்றான்.. அங்கேயே யாகம் நடத்த வேண்டி தேவலோகத்தில் இருப்பவர்களையும், தேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அழைத்தான். சிவனை உதாசினம் செய்து சித்ததந்து இந்த யாகத்தை நடத்துவது அனைவரும் அறிந்திருந்தார்கள்.
அதனால் எல்லோரும் சித்ததந்துவிடம் ”சிவனின் அருளை பெறவேண்டி இந்த யாகத்தை நடத்தினால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொள்கிறோம். ஆனால் சிவனை மிஞ்சி நடத்தும் யாகத்தில் எங்களால் கலந்துகொள்ள இயலாது ”என்றார்கள்.
அடுத்ததாக நான்முகனான பிரம்மனிடம் சென்றான். ”மிகப்பெரிய வேள்வியை மேருமலையில் நடத்தப்போகிறேன்... தாங்கள் வந்து வேள்வியில் பங்கு கொள்ள வேண்டும்” என்று அழைத்தான். ”மிக்க மகிழ்ச்சி யாருக்காக வேள்வி நடத்துகிறாய் என்று கேட்டார் பிரம்மா. எனக்காக... இந்த வேள்வியை நடத்த விரும்புகிறேன்” என்றான் சித்ததந்து.. ”நடக்காத காரியத்தைப் பற்றி சந்தோஷம் கொள்ளாதே .. இப்படியொரு எண்ணம் மனதில் எழுவதே தவறு.. இதை நீ செயல்படுத்த நினைப்பது தவறிலும் தவறு” என்று அறிவுறுத்தினார் பிரம்மா..
மமதையில் இருந்த சித்ததந்துவுக்கு கோபம் பொங்கியது... உங்கள் உதவி இல்லாமலேயே என்னால் யாகம் செய்ய இயலும் என்று கர்வத்துடன் யாகத்துக்கான வேலைகளைத் தயார் செய்தான். அப்போது நாரதர் அவனிடம் வந்து விஷயமறிந்தார். எங்கு கலகம் என்று பார்க்கும் நாரதருக்கு அன்று அதிகப்படியான விஷயம் கிடைத்ததே.... உடனடியாக கயிலாயம் சென்றார்.
சிவனி டம் சித்ததந்துவின் அகங்கார வேலையைப் பற்றி சொல்லிவிட்டார்... சிவப் பெருமான் இந்த யாகத்தை நிறுத்தும் பொருட்டு அனைவரையும் அழைத்து மேருமலையில் யாகம் செய்யும் அரக்கனை அழைத்து வார் என்று ஆணையிட்டார். இதை அறிந்துக்கொண்ட சிவத்தந்துவும் போருக்கு தயாரானான். போர் பயங்கரமாக நடந்தது. அரக்கனை அழிக்க அகோராஸ்திரம் என்னும் பானம் உபயோகிக்க தயாரானர்கள்.
வேள்வியை நிறுத்தி சிவத்தந்துவை அழிக்கும் போது அவனது மனைவிகள் தனக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று யாசித்தார்கள்... இறுதியில் சிவத்தந்துவுக்கும் புரிந்தது.. யாகத்துக்கான சக்தியை தரும் முழுமுதலானவனை எதிர்த்து செய்யப்படும் யாகத்தில் எப்படி அவனை மீறி சக்தி பெறமுடியும் என்பது அகோரமூர்த்தி என்று அழைக்கப்பட்ட சிவப்பெருமானை...திருவெண்காடு தலத்தில் தரிசிக்கலாம்.
நமக்கு சக்தி அளிப்பதே இறைவன் என்னும் போது இறைவனை எதிர்த்து செய்யும் யாகத்துக்கு இறைவனால் எப்படி சக்தி அளிக்க முடியும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment