Monday, 22 April 2019

நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்.!!

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. 

புதன் அளிக்கும் பத்ர யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் புதன் கிரகம் மிதுனத்தில் ஆட்சியாகவோ அல்லது கன்னியில் உச்சமாகவோ அமர்ந்துள்ள நிலையில், அந்த இடங்கள் அவருக்கு லக்னத்தில் இருந்து அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து 1,4,7,10 ஆகிய இடங்களாக அமைந்திருக்கும் பட்சத்தில் ‘பத்ர யோகம்’ ஏற்படுகிறது. இந்த யோகம் கொண்டவர்கள் ஜோதிடம், கணிதம், இசை நுட்பம் ஆகியவற்றில் விசேஷமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். நவக்கிரகங்களில் இளவரசன் என்று புதனை குறிப்பிடுவார்கள். அதனால் இந்த யோகம் வாய்த்த வர்கள் பலருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள்.

வித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன், புத்திகாரகனாக இருப்பவர் புதன். எனவே இந்த யோகம் காரணமாக ஒருவர் தனது அறிவாற்றல் மூலம் தலைமைப் பொறுப்பில் எளிதாக அமருவார். ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புத்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். 

பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர். கணிதத்தில் மேதையாக இருப்பார். வக்கீல் பணியில் திறமைசாலியாக செயல்பட்டு உயர்வு பெறுவார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய உன்னத நிலையும், கலைகளில் நல்ல தேர்ச்சியும் உண்டாகும். வாக்கு சாதுரியம், கற்பனை திறன் போன்றவற்றால் பெரிய இடத்தில் இருப்பார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment