கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்னும் போது நான் என்னும் எண்ணம் வந்தால் எப்படி நடப்பவை நன்மையாக இருக்கும். அர்ஜூனனுக்கும், அனுமனுக்கும் இடையில் நடபெற்ற கதை இது...
ஒருமுறை பாசுபதாஸ்திரம் தேடி அர்ஜூனன் செல்லும் போது வழியில் அனுமன் தன் உருவை மறைத்து சிறிய வானரமாக அமர்ந்து இராமநாமம் ஜெபித்துக் கொண்டிருந்தான்... அனுமனைக் கண்ட அர்ஜூன் வம்புக்கு இழுத்தான் “இராமர் தான் வில்விடுவதில் சிறந்தவன் ஆயிற்றே… பிறகு ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டினீர்கள்?” என்று கேட்டான்...அனுமருக்கு வந்தது அர்ஜூனன் என்று தெரியவந்தது.. அர்ஜூனனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தான் அனுமன்...
“சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது என்னும் போது எங்கள் வானரப்படையை எப்படித் தாங்கும்” என்றான். “அப்படியானால் ஒன்று செய் என் வில் அம்பால் நான் பாலம் கட்டுகிறேன். நீ அதன் மீது எழுந்து நில்.. பாலம் உடைந்தால் நான் வேள்வித்தீ எழுப்பி உயிரை விடுகிறேன்.. ”என்று அர்ஜூனன் கூறினான். ”பாலம் உடையாவிட்டால் நான் ஆயுளுக்கும் அடிமையாக இருப்பேன்.. ”என்றான் அனுமன்...
தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன் வில்லை ஏற்றி சரப்பாலத்தை அமைத்தான். அனுமன் ஓரமாக அமர்ந்து இராம நாமம் ஜெபிக்க தொடங்கினான்... ”பாலம் கட்டிவிட்டேன்...வா அனுமா” என்றான் அர்ஜூனன்... அனுமன் பாலத்தின் மீது கால்வைத்ததும் பாலம் சுக்கு நூறாக நொறுங்கியது.. ”பார்த்தாயா இராம நாமத்தின் மகிமை” என்றான் அனுமன்... தலைகுனிந்த அர்ஜூனன் வேள்வித்தீ மூட்டி இறங்கபோனான்..
அப்போது வந்த அந்தணர் அர்ஜூனனைத் தடுத்தார்.. நடந்ததைக் கேள்விபட்ட அவர்... ”சாட்சி இல்லாமல் நடந்த சபதங்கள் செல்லாது அதனால் என் முன்பு மீண்டும் நீ பாலம் கட்டு” என்றார்.. இம்முறை அர்ஜூனன் பரந்தாமனை நினைத்து பாலத்தை எழுப்பினான். அனுமன் இராம நாமம் சொல்லாமல் பாலத்தின் மீது நிற்க தயாரானான்...
இம்முறை பாலம் வலிமையாக இருந்தது. கர்வத்தோடு நடந்த அனுமன் பாலம் உடைந்து விழாததைக் கண்டு திகைத்தான்... ”பார்த்தாயா என் கிருஷ்ணனின் சக்தியை..” என்றான் அர்ஜூனன்...அனுமனுக்கு குழப்பம் உண்டாயிற்று... இரு வரும் அந்தணரைப் பார்த்தார்கள். அவர் முகத்தில் மர்ம புன்னகை கிளம்பியது...”எங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றவர்கள்.. நீங்களே சொல்லுங்கள்.... அதற்கு முன் நீங்கள் யார்” என்றார்கள்...
”நான் யார் என்பதைப் பிறகு சொல்கிறேன்... முதலில் நீங்கள் இருவருமே ஜெயிக்கவில்லை. ஜெயித்ததெல்லாம் பரந்தாமன் தான். முதலில் அவன் பெயரை சொல்லி பாலத்தில் பாதம் பதித்ததால் அனுமன் ஜெயித்தான்... அர்ஜூனன் தனது திறமையின் மீது கர்வம் கொண்டிருந்ததால் தோற்றுவிட்டான்.
பிறகு அர்ஜூ னன் கிருஷ்ணனை நினைத்து பாலம் கட்டினான். அனுமன் கர்வத்தால் பாலத்தை மிதித்தான். ஆக இருவரும் கர்வமாக இருந்த தருணத்தில் வெற்றிபெறவில்லை... ஆனால் இறைநாமம் சொல்லிய போது ஜெயித்துவிட்டீர்கள்” என்றார்..
இருவரும் தங்கள் பக்கம் இருந்த தவறை உணர்ந்து தலைகுனிந்தார்கள். அந்தணராக இருந்த பரந்தாமன் காட்சி கொடுத்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment