Tuesday, 4 December 2018

முக்திக்கு வித்திடும் ஏகாதசி விரதம் இருக்கும் முறை.!!

மனிதர்களாக  பிறந்த நாம் ,அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமா... எதை செய்தால் முக்தி நிலை அடையலாம்... எதைப் பின்பற்றினால் மேன்மை அடையலாம் என்று நாராயணீயத்தில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசி கொண்டு வீட்டில் பூஜை செய்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்கிராம  பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமாவை உச்சரித்தல். இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.
இந்த முறைகளில் நம் அனைவரும் எளிதாக பின்பற்றக்கூடிய ஏகாதசி விரத முறையைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பத்ம புராணத்தில் ஏகாதசி

தாங்கள் வாழும் காலத்தில் மனிதர்கள்  அறிந்தும் அறியாமலும் செய்யக் கூடிய பாபங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக யமலோகத்தை  சிருஷ்டித்து யமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார் பகவான் விஷ்ணு.
யமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு  மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறு நாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறு நாள் த்வாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள்,  ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே  குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி  சாப்பிடலாம். உடல்நிலை  மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம்  இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம்.
அன்று இரவு முழுவதும் கண்விழித்து விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம்  பாரணை என அழைக்கிறோம் .
துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் இடம் பெற வேண்டியது அவசியமாகிறது. விரதத்தை முடிக்கும் போது, நீரை கூட அருந்தாமல் பூரண விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்தும்  உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை எப்படி சிரத்தையுடன் கடைப்பிடிக்கிறோமோ, அது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும்.

ஏகாதசி விரதம் அன்று செய்யக்கூடாதவை

விரதம் அனுஷ்டிப்பவர்கள், கண் விழிக்கிறேன் என்று திரைப்படம் பார்ப்பதோ, கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ கூடாது. அன்று இரவு முழுவதும் நாராயணனை மனதில் இருத்தி அவர் நாமாக்களையே வாய் நிறைய சொல்ல வேண்டும்.

ஏகாதசி விரதம் அன்று உண்ணத் தக்கது

பூரண விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், உலர்ந்த பழங்கள், உருளை கிழங்கு, பூசணிக்காய், பப்பாளி காய், வெள்ளரி காய், பலா பழம், எலுமிச்சை, தேங்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் அன்று உண்ண தகாதது  

வெங்காயம், பூண்டு,  காரட், தக்காளி, கத்திரிக்காய், காலி ப்ளவர், பட்டாணி, பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கை, வாழைப்  பூ, தானியங்கள், தானியங்களால் ஆக்கப்பட்ட மாவு வகைகள் மற்றும் எண்ணெய்கள், தேன் முதலிய பொருட்களை தவிர்த்தல் நலம்.
ஐம்புலன்களை அடக்கி ,கடவுளின் சிந்தனையில் மனம் ஈடுபடுவதால் மனத் தூய்மை அடைவதுடன், பூரண விரதம் மற்றும் மற்றும் விரதநாட்களில் சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ஏகாதசி நாள் முழுவதும் நாராயணன் நாமம் சொல்வதால், இறைவனின் அருளுக்கு பாத்திரமாவோம்...

ஓம் நமோ நாராயணாய...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment