ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.
மார்கழி மாதம் வருகின்ற ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அப்போது சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலை திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். ஸ்ரீரங்கம் விஷ்ணு ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்க வாசலில் நுழையக் காத்திருப்பர்.
அன்று முழுநாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து அந்த அவலைச் சாப்பிட்டால் நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள் தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.
அந்தத் திருநாள் மார்கழி மாதம் 3-ந் தேதி செவ்வாய்க்கிழமை (18.12.2018) அன்று வருகின்றது. மறுநாள் துவாதசியன்று அன்னம் வைத்து உணவு முறைப்படி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment