Tuesday, 11 December 2018

குருபகவானின் கிரகப் பார்வையால் உண்டாகும் யோகங்கள்?

குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தால் என்ன யோகம் உண்டாகும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

குருபகவான் சந்திரபகவானைப் பார்த்தால் ஏற்படுவது - குரு சந்திரயோகம்


* மனநிலை சீரடையும்.
* கற்பனை வளம் ஓங்கும். 
* கலைத்துறையில் மேண்மை  உண்டாகும். 
* உடல் ஆரோக்கியம் சிறப்பாகும். தாய் நலம் சீராகும்.


குருபகவான் செவ்வாய் பகவானைப் பார்த்தால் உண்டாவது - குருமங்கள யோகம்


*அரசாங்கத்தில் உன்னத பதவி. 
* ராணுவத்தில் முன்னணி பதவி 
* பொறியியல் துறையில் தேர்ச்சி. 
* நிலபுலன்கள், சொத்துகள் சேர்தல்.


குருபகவான் புதபகவானைப் பார்த்தால்


* மகாபுத்திசாலித் தனம் ஏற்படும். 
* கல்விமான், நுட்பமான விஷயம், கணிதம், நிபுணத்துவம். 
* வியாபாரம், இனிமையான பேச்சு, வழக்கறிஞர், நீதிபதி, சொற்பொழிவாளர், மாமன் மூலம் நலம்.


குருபகவான் சுக்கிரபகவானைப் பார்த்தால் 


* கலைஞானம், நடிப்புத்துறை. 
* அரசியல் அந்தஸ்து. 
* நல்வாழ்க்கை துணை அல்லது துணைவர்.


குருபகவான் சனிபகவானைப் பார்த்தால்


*சனிபகவானால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையக்கூடும். 
* நிலம், மண் இவற்றால் லாபம். 
* நிலக்கரி, எண்ணெய், ஈயம். 
* பஞ்சாயத்து, பொதுநலப்பணி, தார்மீகப் பணி.


குருபகவான் ராகுபகவானைப் பார்த்தால்


* புகழ் உண்டாகும், நடிப்புத்துறையில் வெற்றி. 
* வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு. 
* ஸ்பெகுலேஷன், நவீன விஞ்ஞானத்தில் சாதனை...



No comments:

Post a Comment