அபிஷேகங்களும், ஆராதனைகளும் இறைவனுக்கு பிடித்தமானவை. நம்முடைய முன்னோர்களும் இறை அருளுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள இத்தகைய சம்பிரதாயங்களை வகுத்து வைத்துள்ளனர். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பரியம் உண்டு. அவற்றைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது பால் அபிஷேகம்.நம்முடைய எண்ணமும்,சிந்தனையும் பாலைப் போன்று தூய்மையாக இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாகும்.
வெம்மையை தவிர்க்கும் இளநீர். சேர்ந்தாரை எரிக்கும் கோபமாகிய ஆயுதம் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது,மாறாக அனைவரின் மனதையும் குளிரவைக்க வேண்டும் என்று உணர்த்துவதே இளநீர் அபிஷேகம்.
தேன் போன்ற மொழிகள் தான் அனைவரும் விரும்புவது .எல்லோரிடமும் இனிமையாக இருக்க நினைவூட்டுவதே தேன் அபிஷேகம்.
நம்மிடம் இருக்கும் நற்குணங்களையே எப்பொழுதும் அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவதே பன்னீர் அபிஷேகம்.
இந்த உடல் நிலையற்றது ஆனால் ஆன்மாவிற்கு முடிவு என்பதே இல்லை. முடியாண்ட மன்னரும்,முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை நினைவூட்டவே திருநீறு அபிஷேகம்.
எப்பொழுதும் நம் வாயிலிருந்து மங்களகரமான வார்த்தைகளை வர வேண்டும் என்ற பொருளை உணர்த்துவது மஞ்சள் அபிஷேகம்.
வாழ்க்கை முழுவதும் இறை சிந்தனை மற்றும் செயலுக்காகவே சந்தனமாக தேய வேண்டும் என்ற அர்த்தத்தை உள்ளடக்கியது சந்தன அபிஷேகம்.
எடுத்த இந்த பிறவியை அனைவரின் நலனுக்காகவும் வாழ்ந்து,இந்த பிறவி பயணத்தை இனிதே முடிப்பேன் என்று நீர் அபிஷேகம் மூலம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
எந்த செயலையும் நேர்மறையான விளக்கத்துடன் நம்மை பொருத்திக் கொண்டால் முழுமையான ஆன்ம திருப்தி கிடைக்கும்.அடுத்தமுறை இறைவனுக்கு நாம் அபிஷேகம் செய்தாலோ அல்லது அபிஷேகங்களை காண நேர்ந்தாலோ,இந்த சிந்தனை நம் மனதில் தோன்றினால் நம்முள்ளும் இறைவன் உறைவான்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment