அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..நம் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வீட்டில் செல்வம் பெருகவும்,நேர்மறை சிந்தனை வளரவும் நிறைய பழக்க வழக்கங்களை கையாண்டனர்.
காலப்போக்கில், மாற்றத்தை விரும்பிய நம் தலைமுறையினர் அதை பல்வேறு பெயரில் பலவிதமாக பின்பற்றுகின்றனர். மிக சமீபகாலமாக தான் வாஸ்து என்றொரு சொல்லை நாம் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இப்போது எல்லோருடைய வீட்டிலும் அதிர்ஷ்டத்தை கொண்டு வர ஏதாவது ஒரு பொருளை வீட்டில் வைப்பது வழக்கமாகி விட்டது. மீனில் ஆரம்பித்து மூங்கில் செடி வரை விதவிதமான பொருட்கள் இப்போது கிடைக்கிறது. அதில் எல்லோருக்கும் பிடித்தது லாஃபிங் புத்தா எனப்படும் சிரிக்கும் புத்தர் சிலை.
துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டில் நிலவும் மந்தமான சூழல் மாறி சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் தோற்றமே,நம் கவலைகளையும், மன அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும் விதமாக இருப்பதால் அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமும் இவர் தான்.
சிரிக்கும் புத்தரை வீட்டில் வைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
ஒரு வீட்டின் அதிர்ஷ்ட புள்ளியாக கிழக்கு திசை தான் கருதப்படுகிறது. அதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை சச்சரவு, வாக்குவாதம் ஏற்பட்டு, வீட்டில் மகிழ்ச்சியில்லாத சூழல் ஏற்படும் போதும், இவரை கிழக்கு திசையில் வைப்பது பலன் அளிக்கும்.
ஃபெங் ஷுய் மரபில், உள்ளபடி ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஏற்ற ஒரு குறிப்பிட்ட திசை, அதாவது அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையில் ,சிரிக்கும் புத்தரை வைத்தால் செல்வம் பெருகுவதோடு, வாழ்க்கையில் வெற்றி கிட்டும் .மேலும் தனி நபரின் இலக்கு வெற்றியடையவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் உதவும்.
சிரிக்கும் புத்தரை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டமும் ,வீட்டின் வருமானம் உயர்த்திடவும் செய்யும். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், மன அழுத்த நீங்கி, மனநிலையை மேம்பட்டு, தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். .
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் வேண்டுவோர்,சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீது வைக்கலாம். மாணவர்களும் இச்சிலையை படிக்கும் போது தங்கள் அறையில் படிக்கும் மேஜையின் மீது வைத்துக் கொண்டால், கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும்.
சிரிக்கும் புத்தருக்கு ஆகாத திசை
புத்த மதத்தால் பெரிதும் மதிக்கப்படும் சிரிக்கும் புத்தரை மிகவும் மரியாதையாக வணக்க வேண்டும்.இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும் என்பதால், அதற்கு மதிப்பளிக்க தவறக்கூடாது. இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது.
சிரிக்கும் புத்தகரின் சிலை எப்போதும் நாம் மேல்நோக்கி பார்ப்பது போல், நம் கண்களின் மட்டம் வரையாவது இருக்க வேண்டும்.கீழ்நோக்கி பார்க்கும்படி இருக்கக் கூடாது. அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் இந்த சிலையை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி இருக்குமாறு வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment