Monday, 29 October 2018

திருமண தடை, ராகு-கேது தோஷம் நீக்கும் பரிகாரம்.!!

திருமணத் தடை, ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் சோமேஸ்வரர் திருக்கோவில் மூலவருக்கு அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் கருவறையில் லட்சுமி நரசிம்மர் சுயம்பு வடிவாகவும், அதனை ஒட்டி புற்றும் உள்ளது. 

மார்கழி மாதத்தில் 30 நாட்களிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் திருப்பாவை வழிபாடும், வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.

ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் தங்கள் குழந்தையை தத்துக் கொடுத்து நெய் தீபம் ஏற்றி பூஜை செய்தால் தோஷம் நீங்குகிறது. திருமணத் தடை மற்றும் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் மூலவர் அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும். 

லட்சுமி ஹயக்கிரீவர் உற்சவருக்கு வியாழக்கிழமை தினத்தில் 108 ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment