Thursday, 11 October 2018

ஸ்ரீ சாயிநாமத்தை சொல்லி கொண்டு இருக்க நல்லதே நடக்கும்.!!

பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த நன்மைகளை நினைத்து பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் அன்பை நாம் உணர முடியும். சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். 

காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக ஒதுக்கி உங்களுக்கு விருப்பமான சாயி நாமத்தை சொல்லுங்கள். உதாரணமாக 'சாயி, சாயி' அல்லது 'ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய ஜெய சாயி நமோ நமஹ', 'ஓம் சாயிராம்' அல்லது 'ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ' என்று உங்கள் விருப்படி சொல்லி வாருங்கள். பின்னர் நாள் முழுவதும் சாயிநாமம் உங்கள் இதயத்தில் ஒளித்துக் கொண்டே இருக்கும். 

பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே அவரின் நாமத்தை சொல்ல முடியும். உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள். உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள். உங்கள் கடமைகளை, கடமை தவறாமல் செய்து வாருங்கள். பாபாவை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள். பூஜைகள் செய்து சோர்ந்து போக வேண்டாம். சிறிதளவு நேரத்தை ஒதுக்கி  நமஸ்காரம் செய்யுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment