Monday, 29 October 2018

பாடுங்க! வள்ளி மாணாளனை பாடுங்க.!!

தைப்பூச நாயகன் முருகனை வழிபடும் விதத்தில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பக்தியுடன் படித்து, வள்ளி மணாளனின் நல்லருள் பெறுங்கள்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ 
சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள் 
மைந்தா குமரா மறைநாயகனே.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை 
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி.

முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிருகை 
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 
வேலப்பா செந்தில் வாழ்வே.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன். 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான். 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்....

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment