மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?
தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களால் வந்தது என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.
எந்த நட்சத்திரத்தில் என்ன பலன்?
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
நோயில் இறந்தவர்களுக்கு பிரதமையில் தர்ப்பணம்
சிலர் நீண்ட நாட்கள் ஏதாவது தீராத கொடிய வியாதிகளில் சிக்கி மரணம் அடைந்து இருப்பார்கள். சிலர் கடைசி வரை புத்திர பாக்கியம் கிடைக்காமல் ஒரு வித ஏக்கத்துடன் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். சிலர் விபத்துகளில் உயிரிழந்திருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதிகளால் கை விரல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். இத்தகைய பித்ருக்களுக்கு பிரதமை திதியன்று வழிபாடுகள் செய்வது நல்லது.
விவாகரத்தில் இறந்தவர்களுக்கு துவிதியில் தர்ப்பணம்
விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம் சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு தூவிதியை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment