அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.
மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.
அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.
மேலும் ஏழைகளுக்கு அன்னத்தை தானம் செய்யும் போது, உங்கள் பித்ருக்களை மனதில் தியானம் செய்து கொண்டே மிக, மிக பணிவுடன் செய்ய வேண்டும். அன்னதானம் செய்கிறோம் என்ற அகந்தை மனதுக்குள் துளி அளவு கூட வந்து விடக்கூடாது.
அதுவும் அன்னத்தை குடும்பத்து பெண்கள் தங்கள் கைப்பட சமைத்து வழங்கி இருந்தால், அந்த பெண்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும்.
அன்னதானத்துடன் பித்ரு காரியங்களுக்கு உரியதாக கருதப்படும் எள் உருண்டை, அதிரசம், பணியாரம், தேன்குழல், உளுந்து வடை, தேங்காய்பால், பால்பழம், சுசீயம், மாவு உருண்டை மற்றும் இனிப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம். சிலர் தங்கள் மூதாதையர்களுகு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள். இவையெல்லாம் பித்ருக்களை முழுமையான அளவில் திருப்திப்பட வைக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment