வேலுநாச்சியாரை பிடித்தே தீர வேண்டும் என்று கும்பனியர் அரியாக்குறிச்சி எனும் காட்டிற்கு அருகேயிருக்கும் ஐயனார் கோயிலுக்கு வந்தார்கள். அருகே உடையாள் எனும் கன்னிப் பெண்ணிடம் வேலுநாச்சியார் எந்தப் பக்கம் போனாள் என்று கேட்டார்கள். உடையாள் அவர்களை நோக்கி, ‘‘ராணி எந்தத் திசையில் சென்றார்கள் என்றும் தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன்’’ என்று உறுதியோடு கூறினாள். அவளை காலால் உதைத்து தலையை வெட்டி எறிந்தனர். உடையாள் வெட்டுப்பட்டுக் கிடந்த்ததால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள். அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன.
அந்த எழுத்துக்கள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கும் அங்கேயே கோயிலுக்குள் தனிச் சந்நதி நிறுவினர். வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து குறைகளை தீர்த்து வைக்கிறாள். அதிலும் அப்பாவி யான எவரை ஏமாற்றினாலும் இவள் சும்மாயிருப்பதில்லை என்கிறார்கள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment