திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரை எந்த நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். பெருமாள் கோவில்களில் கருவறை எதிரே கைகூப்பிய நிலையில் இவரைக் காணலாம். வளர்பிறை பஞ்சமி திதி இவரை வழிபட நல்ல நாள்.
பாம்பு கனவில் வந்தாலோ அல்லது கண்ணில் பட்டாலோ கருடனை வழிபட்டு பரிகாரம் தேடலாம். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். அநேக கோவில்களில் பெருமாள் எதிரே இருக்கும் கருடாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் மற்றும் ஆண்டாளின் அருகில் இருக்கிறார்.
ஆதிமூலமே, என்று அழைத்த கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைத் தீர்க்க பெருமாள் கருடன் மீது விரைந்து வந்து அருள் செய்தார். பக்தர்களின் துயர் போக்கிட எப்போதும் விரித்த சிறகுகளுடன் கருடாழ்வார் வைகுண்டத்தில் காத்திருக்கிறார் என்பது ஐதீகம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment