Friday, 21 September 2018

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.!!

கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார். அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர்.

அவற்றுள்ளும் கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும். இந்த கருட புராணத்தில், கருட பகவான், “இவ்வுலகில் மனிதர்கள் ஏன் பிறக்கின்றனர்? அவர்கள் இறந்த பின் சிலர் நரகத்திற்கும் சிலர் சொர்க்கத்திற்கும் செல்வது எதனால்?

சிலர் இரண்டிற்கும் செல்லாமல் பிரேத ஜென்மமாக ஆவியுருவில் அலைவது எதனால்? இந்த ஜென்மம் நீங்க என்ன செய்ய வேண்டும்? முக்தியை அடைய என்ன செய்ய வேண்டும், மரண காலத்தில் முன் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டு முக்தி அடைய வழி ஏதாவது உண்டா? அத்தருவாயில் யாரை நினைக்க வேண்டும்? ஆகியவற்றுக்கு விடை கூறியுள்ளார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment