வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
இந்த ஷ்ரவண மாதம் (ஆடி மாதம்) என்பது பக்திக்கு மிகவும் உகந்த மாதமாகும். எனவே தான் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை இம்மாதத்தில் வழிபட்டு நிறைய வரங்களை வேண்டிப் பெறுகின்றனர். இந்த ஷ்ரவண மாதமானது ஜூலை மாதம் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் முடியும்.இக்காலம் வட மற்றும் தென் இந்திய மக்கள் வழிபாட்டுக்கென்றே செலவிடும் ரொம்ப சிறப்பான காலமாகும். வட இந்தியர்கள் இம்மாதத்தில் தீஜ் பூஜையையும், தென் இந்தியர்கள் வரலட்சுமி நோன்பையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.இந்த வரலட்சுமி விரதமானது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதுவே மகாலட்சுமி பூஜை என்ற பெயரில் வட மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுகின்றன.சரி வாங்க இப்பொழுது இந்த வரலட்சுமி விரதத்தை எப்படி கடைபிடித்து வழிபடுவது என்று பார்ப்போம்எப்போது கொண்டாடப்படுகிறது? இந்த வரலட்சுமி பூஜையானது ஒவ்வொரு வருடமும் ஷ்ரவண மாதத்தில் சுக்ல பட்சத்தின்போது முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது
வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது ?
வரலட்சுமி விரதம் செல்வ அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்காக கொண்டாடப்படுகிறது. அம்மாளின் ஆசிகளையும் வரங்களையும் பெறுவதற்காகவே இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் லட்சுமி தேவியின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களுடனும் வளங்களுடனும் சீரும் சிறப்புமாக வாழலாம் என்பது எல்லா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விரதத்தை முக்கியமாக சுமங்கலிகள் தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், செளபாக்கியமும் பெறவும் கடைபிடிக்க வேண்டும்.
விரதத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்
வரலட்சுமி விரதத்தின் போது மகாலட்சுமியின் அருளை பெற நிறைய மந்திரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இரண்டு மந்திரங்கள் இந்த விரதத்திற்கான மிகவும் உகந்த சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். அவைகள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி ஸஹஸ்ரநாமம் ஆகும்.ஸ்லோகம் :பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம் க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம் க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம் பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹர வரலக்ஷ்ம்யை நம
வரலட்சுமி விரத முறைகள்
இந்த விரதம் இருப்பதற்கு உங்கள் உடலை வருத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒரு முகபடுத்தி ஸ்ரீ மகாலட்சுமி தேவியை நினைத்தாலே போதும். இங்கே விரதத்திற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்களும், உடல் நிலை சரியில்லாதவர்களும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வழக்கமாக விரதமானது சூரிய உதயமான நேரத்தில் இருந்து பூஜை நல்லபடியாக முடியும் வரை இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு தகுந்த நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம். பச்சை வாழைப்பழங்களை இந்த நாளில் சமைக்கக் கூடாது. சுண்டல் இந்த நாளுக்கான முக்கியமான உணவாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி கலச பூஜை, பக்தி பாடல்கள், மகாலட்சுமி பூஜை, பிரார்த்தனை, ஆர்த்தி என்று வழிபடலாம்.
பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலும்பிச்சை பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்து விளக்கு, நோன்பு கயிறு மற்றும் நிவேதனப் பொருட்களான பொங்கல், பாயாசம் மற்றும் உங்களால் முடிந்த உணவுகள் . மேலும் நகை மற்றும் பணம் வைத்து தொட்டு கும்பிடலாம்.வரலட்சுமி பூஜை செய்ய முடியாத தருணம் :சில சமயங்களில் உடல்நலம் சரியின்மை , பெண்களுக்கு மாதவிலக்கு போன்ற காரணத்தால் செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் அடுத்த வார வெள்ளிக்கிழமை அல்லது நவராத்திரி வெள்ளிக் கிழமை நாட்களில் இந்த பூஜையை செய்து அதே பலனை பெறலாம்.
வரலட்சுமி நோன்பு கயிறு இந்த விரதத்தின் முக்கிய பொருள் வரலட்சுமி விரத கயிறு. விரதத்தின் முடிவில் மஞ்சள் நூலை(சரடு) கையில் கட்டிக் கொள்வார்கள். எட்டு லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமி என்பதால் அந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளுடன் நடுவில் பூ சுத்தி பூஜையில் வைத்து வழிபட்டு எல்லாரும் தங்களது வலது கைகளில் கட்டிக் கொள்வர்.வரலட்சுமி பூஜையின் போது செய்யக் கூடாதவை யாரையும் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் இந்த பூஜையானது எல்லாரும் மனசார வேண்டி வழிபடுவது முக்கியம்.இந்த பூஜையை புதிதாக ஆரம்பிக்க போறீங்கள் என்றால் இதை பற்றி தெரிந்தவர்களிடம் அதன் முறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும். இந்த பூஜையானது சுமங்கலி பெண்கள் செய்யக் கூடிய பூஜை. கல்யாணம் ஆகாத பெண்கள் அவர்கள் அம்மாக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு வழிபடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரலட்சுமி 108 போற்றியை தினமும் இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
மாங்கல்ய பாக்கியம் தரும் வரலட்சுமி
108 போற்றி
ஓம் அகில லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
ஓம் அமர லட்சுமியே போற்றி
ஓம் அம்ச லட்சுமியே போற்றி
ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
ஓம் அனந்த லட்சுமியே போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இன்ப லட்சுமியே போற்றி
ஓம் இதய லட்சுமியே போற்றி
ஓம் ஈகை லட்சுமியே போற்றி
ஓம் உதய லட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் உபாசன லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
ஓம் கருணா லட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கபில லட்சுமியே போற்றி
ஓம் கமல லட்சுமியே போற்றி
ஓம் கற்பக லட்சுமியே போற்றி
ஓம் கஜ லட்சுமியே போற்றி
ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குரு லட்சுமியே போற்றி
ஓம் கோமள லட்சுமியே போற்றி
ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சங்கு லட்சுமியே போற்றி
ஓம் சக்கர லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
ஓம் சகல லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
ஓம் சீதா லட்சுமியே போற்றி
ஓம் செல்வ லட்சுமியே போற்றி
ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சுப லட்சுமியே போற்றி
ஓம் ஜெய லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் தங்க லட்சுமியே போற்றி
ஓம் தயா லட்சுமியே போற்றி
ஓம் தர்ம லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தவ லட்சுமியே போற்றி
ஓம் தான லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் தாமரை லட்சுமியே போற்றி
ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நித்ய லட்சுமியே போற்றி
ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
ஓம் நீல லட்சுமியே போற்றி
ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
ஓம் பவள லட்சுமியே போற்றி
ஓம் பக்த லட்சுமியே போற்றி
ஓம் பத்ம லட்சுமியே போற்றி
ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் பால லட்சுமியே போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
ஓம் புவன லட்சுமியே போற்றி
ஓம் புனித லட்சுமியே போற்றி
ஓம் பொன் லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மதன லட்சுமியே போற்றி
ஓம் மதுர லட்சுமியே போற்றி
ஓம் மங்கள லட்சுமியே போற்றி
ஓம் மாதவ லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மகுட லட்சுமியே போற்றி
ஓம் மரகத லட்சுமியே போற்றி
ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
ஓம் மாதா லட்சுமியே போற்றி
ஓம் முத்து லட்சுமியே போற்றி
ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
ஓம் யோக லட்சுமியே போற்றி
ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
ஓம் ராம லட்சுமியே போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விமல லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
ஓம் வேணு லட்சுமியே போற்றி
ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment