சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் பணியாற்றியவர் வென்றிமாலை. இவருக்கு கோயில் நிர்வாகம், ஏதோ காரணத்துக்காக தண்டனை வழங்கியது. அவமானத்தால் மனம் வருந்திய வென்றிமாலை கடலில் குதித்து உயிர் போக்கிக்கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகனருளால் முயற்சி தோற்று, அவர் உயிர்பிழைத்தார். அந்த அற்புதத்தின் தொடர்ச்சியாக, கல்வியறிவே இல்லாத வென்றிமாலையை முருகப்பெருமான் பெருங்கவிஞராக உருமாற்றினார். வென்றிமாலை திருச்செந்தூர் ஸ்தல புராணம் இயற்றிப் பெரும் புகழ் ஈட்டினார். முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த கந்தசாமி புலவர் பார்வையற்றவர்; ஆனாலும் முருகன்மீது முழுமையான மனப்பார்வையைச் செலுத்தியவர். இவர், இங்கே முத்தாலங்குறிச்சியில் முருகனைப் போற்றி பாடினால், அங்கே திருச்செந்தூரிலுள்ள முருகன் பரிவட்டத்தில் எச்சில்கறை காணப்படுமாம்!
இந்தப் புலவருக்குப் பார்வையளித்தும் திருவருள் புரிந்திருக்கிறான் செந்தில்வேலன். இவரைப்போலவே நெட்டூர் அப்பராணந்த சுவாமிகள், குலசேகரப்பட்டினம் ஞானியார் சுவாமிகள், கோயிலில் சமாதி கொண்டிருக்கும் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என பல அன்பர்களுக்குத் தன் திருவருள் பேரின்பத்தை அருளியிருக்கிறான் இந்த கருணை பாலன். திருச்செந்தூரைப் பொறுத்தவரை விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உதய மார்த்தாண்டம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம், ஏகாந்த கால பூஜைகளும் அதே சிறப்போடு நடைபெறுகின்றன. மூலவருக்கு போத்திமார்கள் கேரள முறைப்படியும், வைதீக தாந்திரீக முறைப்படியும், ஷண்முகருக்கு குமாரதந்திர விதிப்படியும் பூஜை செய்கிறார்கள்.
இலை விபூதி பிரசாதம்
திருச்செந்தூர் கோயிலின் பிரதான பிரசாதமாக இலை விபூதி கருதப்படுகிறது. இது வெறும் பிரசாதமல்ல, நோய் தீர்க்கும் அருமருந்து! இந்த பிரசாதம் எப்படித் தயாரிக்கப்படுகிறது? பன்னீர் மரத்திலிருந்து இலைகளைத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்துக் கொடுப்பார்கள். இந்த இலை ஒவ்வொன்றும் பன்னிரண்டு நரம்புகள் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது - ஆறுமுகன் தன் பன்னிரு கரங்களால் பேரருள் புரிவதை விளக்கும் வகையில்! இதை ஏற்கெனவே தயார் செய்து கட்டுக் கட்டாக ஸ்டாக் வைத்திருப்பார்கள். ஆதிசங்கரரின் காசநோயை குணப்படுத்திய அருமருந்தல்லவா, இந்த விபூதி! அதேபோல பக்தர்கள் அனைவரது எல்லாவகை நோய்களையும் தீர்க்கவல்லது என்பது ஆழமான நம்பிக்கை.
காவடி
விசேஷ காலங்களில் பால்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, சர்க்கரைக் காவடி, சாம்பிராணிக் காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி ஆகியவற்றைத் தாங்கி வரும் பக்தர்கள் மிக அதிகம். தம்மைப் பெரிதும் வருத்திக்கொண்டு இக்கோயிலை நாடி வரும் பக்தர்களின் பக்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. ராஜபாளையம், பாபநாசம் போன்ற பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், விரதம் இருந்தும், காலணி ஏதுமின்றி, வெயில், தரைச்சூடு என்று பார்க்காமல், அதேசமயம் உடல் வேதனையை முகத்தில் காட்டாமலும், வாய் மட்டும், ‘முருகா, முருகா’ என்று ஓயாமல் அரற்றிக்கொண்டும் வரும் பக்தர்கள் பார்ப்பவர்களை கண்களில் நீர்த்துளிர்க்க வைப்பார்கள். இவர்களைப் போலவே கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களும் எண்ணிலடங்காதவர்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment