குஜராத் மாநிலம், அகமதாபாத்திலிருந்து நூறாவது கிலோ மீட்டரில் உன்ஜ்கா எனும் தலம் உள்ளது. இங்கு மிகவும் பிரபலமான ஸ்ரீ உமியா மகாதேவி கோயிலும் உள்ளது. இன்று படேல் சமூகத்தினர் என அழைக்கப்படுபவர்கள்; ஆரம்ப காலங்களில் படிடார் என அழைக்கப்பட்டனர். பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் நடத்தியபோது, அதற்கு மருமகனான சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், இதனையும் மீறி, சிவன் தடுத்தும், பார்வதி, தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு வந்தாள். தட்சன், பார்வதியை ஏளனமாய் பேசியதுடன் மருமகன் சிவனையும் கடினமாய் சாடினார்! இதனால் கோபமும் வருத்தமும் அடைந்த பார்வதி யாகத்திற்காக வளர்க்கப்பட்டிருந்த ஹோமத்தில் குதித்து விட்டாள். நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிவன் மனைவி பார்வதியை
தூக்கிக் கொண்டு கோபத்தில் நர்த்தனம் ஆடினார்.
அப்போது விஷ்ணு பார்வதியின் உடலை தன்னுடைய சக்கரத்தால் 51 கூறுகளாக பிளந்து பூமியில் விழும்படிச் செய்தார். இப்படி விழுந்த பாகங்கள் சக்தி பீடங்களாக வணங்கப்படுகின்றன. இங்கும் விழுந்ததாக சொல்கிறார்கள். ஆனால், இது சக்தி பீடங்களுக்குள் வரவில்லை. இன்னும் வேறு விஷயமாக அருகே உள்ள சக்தி பீடங்களின் அபிமானக் கோயில்களாக இதுபோன்ற தலங்களையும் சேர்த்துக்கூறுவது வழக்கமாகும். அதன் தல வரலாற்றையே இதற்கும் சொல்வார்கள். ஒரு சமயம் இந்தப் பகுதியை தாரகாசுரன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அவன் பிரம்மாவிடம், பல வரங்களை பெற்று, பாடாய்படுத்தி வந்தான். அதில் ஒரு வரம்... தனக்கு சிவனின் மகனால்தான் சாவு வர வேண்டும் என்பதாகும். இதற்காகவே சிவன்பார்வதிக்கு கார்த்திகேயன் பிறந்தான். தாரகாசுரனை கொல்ல சிவன் முயன்றார். முடியவில்லை.
சிவனுடன் பார்வதியும் சூலாயுதத்தை பயன்படுத்தி தாரகாசுரனை கொல்ல யத்தனித்தார்கள். ஆனால், முடியவில்லை. பிறகு கார்த்திகேயன் வந்து தாரகாசுரனை கொல்கிறான். அதற்கு பார்வதி உதவுகிறாள். அத்துடன் அவள் இங்கேயே நிரந்தரமாய் குடிகொண்டு இம்மக்களை காப்பேன் என சூளுரைக்கிறாள். பார்வதிக்கு இங்கு ‘உமியா’ எனப் பெயர். இதனால் இந்த தலத்திற்கே ‘‘உமியாதாம்’’ என்ற பெயரும் உண்டு. இனி படிடாருக்கு வருவோம். இவர்கள் ஆரியர்கள் என்றும், பஞ்சாப் வழியாக குஜராத்தில் வந்து 3000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள் என ஒரு வரலாறு கூறுகிறது. மற்றொரு வரலாறு படிடார்களை லவகுசா வம்சத்தை சார்ந்தவர்கள் எனவும் கூறுவது உண்டு. அது எப்படி? சீதை... பூமியை பிளந்துக் கொண்டு செல்லும்முன், பார்வதியிடம், தனது மகன்களான லவகுசர்களை காக்க வேண்டும் எனக் கூறினாளாம். அதன்படி லவகுசர்களை கவனித்துக் கொண்டதாகவும் அப்போது பார்வதி 52 சிலைகளை உருவாக்கினார்.
உடனே சிவன் அவர்களுக்கு உயிரை அளித்தார். அவர்கள் படேல் இன மக்களின் மூதாதையர்களே படிடார்கள் ஆவார்கள்! க்ஷத்ரியர்கள் எனவும் கூறப்படும் சுத்த வீர பரம்பரையினர். இனி கோயிலுக்குச் செல்வோம். வெள்ளை சலவைக் கல்லாலான கோயிலான இது, சாளுக்கியர்களின் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. எங்கேயோ கட்டி முடித்து வைத்து அதையே எடுத்து வைத்தது போல் இருக்கும்! கர்ப்ப கிரக கோபுரம் 44 அடி உயரம் கொண்டது. அதன் மீது மிகப்பெரிய காவிக் கொடி பறக்கிறது. நாலு பக்கமும் முன் வாயில் உண்டு. உள்ளே ரங்க மண்டபம் நல்ல விஸ்தாரமாக உள்ளது. கர்ப்ப கிரகத்தில் அம்மன் காளை மீது அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக நம்மை பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள். ஆறு கைகளில் வலது நடுக்கை நம்மை ஆசிர்வதிக்கிறது. மற்ற கைகளில் கதை உட்பட பல ஆயுதங்கள் உள்ளன. காளைக்கு வெள்ளிக் கவசம் சாத்தியுள்ளனர்.
அம்மனின் தலையில் நவரத்தினங்கள் கொண்ட கிரீடம் அலங்கரித்துள்ளது. பார்த்தாலே ஒரு பய பக்தி ஏற்படுகிறது. அம்மனை சரஸ்வதி மகாலட்சுமி மற்றும் மாகாளியின் அம்சம் என இங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகின்றனர். இப்போதைய கோயில் 175 ஆண்டு பழையது. அம்மனுக்கு நவராத்திரி ரொம்ப விசேஷம். அப்போது தினமும் ஒரு நிறமென விதம்விதமான புடவையில் ஜொலிப்பாள். இங்கு அன்னகூட் விழா உண்டு! அது சமயம் 52 பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. வசந்த பஞ்சமி, வைகாசி பூர்ணிமா வெள்ளி ரதத்தில் அம்மன் பவனி. நவராத்திரி இங்கு மிகவும் விசேஷமாகும். ஐந்து நாட்கள் மகா உற்சவம் நடக்கின்றது. அகமதாபாத் நகரிலிருந்து ஹைவே 41 சாலையில் பயணித்தால் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அகமதாபாத் டெல்லி ரயில் பாதையில் உன்ஜ்கா ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment