Sunday, 8 July 2018

பாளையஞ்சாலைக்குமரா சுவாமி

நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் அழகுற  கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பாளையஞ்சாலைக்குமரா சுவாமி  கோயில் வரலாறு மிகவும் சிறப்பு மிக்கது. இங்குள்ள ஆறுமுகர்  திருச்செந்தூரில் பிரதிஸ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டவர் ஆவார். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணியருக்கு நிகரானவராக கருதப்படுகிறார்.  கடந்த 1648ம் ஆண்டு திருச்செந்தூர் கோயிலில் இருந்து ஆறுமுகநயினார் திருமேனி டச்சுக்காரர்களால் தூக்கி செல்லப்பட்டு நடுக்கடலில் போடப்பட்டது. இதையறிந்த வடமலையப்ப பிள்ளையன் என்பவர் அந்த திருமேனிக்குப் பதிலாக புதிய திருமேனியை  பிரதிஷ்டை செய்வதற்காக 1653ம் ஆண்டு குறுக்குத்துறையில் திருவுருவம் செய்து சிந்துபூந்துறையில் இக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில்  இளைப்பாருவதற்காக அந்த சிலையை இறக்கி வைத்தனர். அப்போது  திருச்செந்தூர் கடலில் ஆறுமுகநயினார் திருமேனி கிடைத்த செய்தியறிந்து  புதியதாக செய்யப்பட்ட இந்த திருமேனியை இறக்கி வைக்கப்பட்ட இடத்திலேயே நிறுவினர்.

பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளதால் பாளையஞ்சாலைக்குமரன் எனப் பெயர் பெற்று பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்து வருகிறார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வழிபாட்டின் மூலம் பெறும் பயன்களை இந்த கோயிலில் வீற்றிருக்கும் முருகனை வழிபடுவதன் மூலம் பெறலாம். இக்கோயிலில்  கிழக்கு முகமாக மூலவர் சந்நிதியும் தெற்கு முகமாக சண்முகர் சந்நிதியும்  அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் சித்தி விநாயகர் சந்நிதியும் அதையடுத்து  சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. கோயில் கருவறையில் உள்ள  அருள்மிகு சாலைக்குமாரசுவாமி மூலவரை பார்த்தவாறே அருள்மிகு வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இரண்டு அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். மூலவர்  சந்நிதியில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெறுகிறது.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு ஏராளமான திருமணங்கள் முகூர்த்த  நாட்களில் நடைபெறுகின்றன. இத்தலத்தில் திருமணம் முடிக்கும் தம்பதியருக்கு  மழலைச் செல்வம் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வைகாசி விசாகம், வருசாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி கந்த சஷ்டி திருவிழா,  திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடையதாகும். கந்தசஷ்டி மற்றும் திருக்கார்த்திகை திருவிழாக்கள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டி நடைபெறும் 6  நாட்களும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள இந்த கோயிலுக்கு தரிசிக்க செல்ல அருகேயே ரயில்நிலையம் மற்றும் நகர பஸ் நிலையம் உள்ளது. மேலும் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment