Thursday, 26 July 2018

ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னை தீரும்?

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உரியது.

ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் என்பதை பார்ப்போம்.

விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ கண் நோய் நீங்கும்.

மதுரை: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வழங்கும் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே குணமாகும்.

மதுரை: எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். அனைத்து மதத்தினரும் இந்த அன்னையை வழிபட்டு நலம் பெறலாம்.

புதுக்கோட்டை: நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீரும். மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டலாம்.

ஊட்டி: மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நிதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி, சூனியங்களை விலக்குகின்றது.

நாமக்கல்: ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுவதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர் வந்தது. ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்ச்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்ச்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டும்.

கோவை: கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப பிரச்னையை தீர்த்து அருள்வதாக ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment