Sunday, 8 July 2018

ஐந்தெழுத்தின் வடிவமாக அய்யர்மலை

அய்யர்மலைக்கு சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், ஐயர்மலை, மணிகிரி, வாட்போக்கி முதலிய பெயர்கள் வழங்கி வருகிறது. சிவாயம் என்னும் சிற்றூருக்கு அருகே இம்மலை இருப்பதால் சிவாயமலை என்றும், மலையேறி செல்லும்படி வழியும், மலைமேற்கோயில் உள்ள பிரகாரங்களும் ஓம் என்ற பிரணவ எழுத்து போலவும், சிவமகா மந்திரமான ஐந்தெழுத்தின் வடிவமாகவும் அமைந்திருத்தலால் சிவாயமலை என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர். மதுரையில் சொக்கலிங்கப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் எட்டு யானைகள் தாங்கும்படியாக இந்திரனால் அமைக்கப்பட்டதை அட்டகிரி விமானம் என்பர். அதேபோல் சுற்றிலும் எட்டுப்பாறைகளுக்கு நடுவேயுள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் காரணத்தால் இந்த மலையை மாணிக்கமலை என்றும் கூறுகின்றனர்.

ஒன்பது பாறைகளும் நவரத்தினங்களை குறிக்கும். மலைக்கோயில் பிரகாரங்களை சுற்றிவரும்போது இப்பாறைகளை காணலாம். யாவருக்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு கோயில் கொண்டிருப்பதால் ஐயர் மலை என்று பெயர் வந்தது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்தனர் என்றும், அதனால் ஐவர்மலை என்ற பெயர் உண்டாயிற்கு எனவும், அப்பெயரே நாளடைவில் திரிந்து அய்யர்மலை என்றாயிற்று என்று தெரிவிக்கின்றனர். தேவாரம், தலபுராணம், கலம்பகம், இவைகளில் வாட்போக்கி என்றும், திருப்புகழில் சிவதைபுரி, ரத்தினவெற்பு என்றும் உலாவில் ரத்தினகிரி என்றும், கோயிலில் காணப்பெறும் பழங்கால கல்வெட்டுக்களில் திருமாணிக்கமலை, திருவாட்போக்கி என்றும் கூறப்பட்டுள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment